Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமா2023ஆம் ஆண்டு யூடியூப்பில் அதிக பார்வையாளர்கள் பெற்ற டாப்-10 தமிழ் பாடல்கள்.. விஜய் ஆதிக்கம்

2023ஆம் ஆண்டு யூடியூப்பில் அதிக பார்வையாளர்கள் பெற்ற டாப்-10 தமிழ் பாடல்கள்.. விஜய் ஆதிக்கம்

2024 ஆம் ஆண்டின் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நமக்கு 2023 மிகவும் பிடித்த அதிக முறை பார்த்து மகிழ்ந்த பாடல்களில் முதல் பத்தில் இருக்கும் பாடல்கள் என்ற பட்டியல் கருப்பொழுது வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

Youtubeல் அதிக பார்வையாளர்களைப் பெற்று முதல் 10 இடத்தில் 10 பாடல்கள் இடம் பிடித்திருக்கிறது அது என்ன வென்று பார்ப்போம்.

பட்டியலில் முதலிடத்தில் இருப்பது தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தில் இடம்பெற்றிருக்கும் ரஞ்சிதமே பாடல் தான். முதல் இடத்தில் இருக்கிறது. இந்த பாடல் கேட்பதில் மட்டுமல்ல பார்ப்பதிலும் ரசிகர்கள் உற்சாகம் அடைகிறார்கள் அதன் காரணத்தினால் இது முதலிடம் காத்திருக்கிறது.

- Advertisement -

ஜெய்லர் திரைப்படத்தில் நடிகை தமன்னாவின் துள்ளலான ஆட்டத்தில் வெளிவந்த காவாலயா என்ற பாடல் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. தற்பொழுது தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படத்தில் நா ரெடி தான் என்ற பாடல் மூன்றாம் இடம் பிடித்திருக்கிறது.

- Advertisement -

அதேபோல் வாரிசு திரைப்படத்தின் ஜிமிக்கி பொண்ணு என்ற பாடலும் இந்த வரிசையில் நான்காம் இடத்தில் இருக்கிறது. நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை தான் பெற்றது. ஆனால் அது இடம்பெற்றிருக்கும் வா வாத்தி என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனால் இந்த பாடல் இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தில் அவருக்கு மிகப் பொருத்தமாக அமைந்த டைகர் கா ஹூக்கும் என்ற பாடல் இந்த பட்டியலில் ஆறாம் இடம் பிடித்திருக்கிறது.

தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தின் தீ தளபதி என்ற பாடல் இந்த வரிசையில் ஏழாம் இடத்தை பிடித்திருக்கிறது. வாரிசு திரைப்படத்தில் இதுவரை மூன்று பாடல்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காமெடியனாய் கலக்கிக் கொண்டிருந்த சூரி கதாநாயகனாய் நடித்த முதல் திரைப்படம் ஆகிய விடுதலை திரைப்படத்தின் காட்டுமல்லி என்ற பாடல் இந்த பட்டியலில் எட்டாம் இடத்தை பிடித்திருக்கிறது திரைப்படத்தை போல் பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

அதேபோல் இந்த ஆண்டில் தல அஜித்திற்கு வெளிவந்த துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அதிலிருந்து வெளிவந்த சில்லா சில்லா என்ற பாடல் இந்த பட்டியலில் ஒன்பதாம் இடத்திலும் தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் பேட் அஸ்மா என்ற பாடல் பத்தாம் இடத்தையும் பிடித்திருக்கிறது

Most Popular