Friday, March 29, 2024
- Advertisement -
Homeசெய்திகள்2023 விகடன் விருதுகள் - எந்த நடிகர்கள், படம் போட்டியிடுகிறது

2023 விகடன் விருதுகள் – எந்த நடிகர்கள், படம் போட்டியிடுகிறது

- Advertisement -

2023 ஆம் ஆண்டிற்கான விகடன் அவார்ட்ஸ் நடக்க இருக்கிறது. அதற்காக ஒவ்வொரு பிரிவிலும் கடந்த ஆண்டுக்கான சிறந்த நாமினேஷன் லிஸ்ட் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதில் 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களுக்கான நாமினேஷன் சிறந்த நடிகருக்களுக்கான நாமினேஷன் தற்பொழுது வெளிவந்துள்ளது. அது என்னவென்று பார்ப்போம்.

சிறந்த நடிகர்களுக்கான நாமினேஷன் லிஸ்ட் நித்தம் ஒரு வானம் என்ற திரைப்படத்திற்காக நடிகர் அசோக் செல்வன், நெஞ்சுக்கு நீதி என்று திரைப்படத்திற்காக நடிகர் உதயநிதி, விக்ரம் திரைப்படத்திற்காக உலகநாயகன் கமலஹாசன், ஆதார் திரைப்படத்திற்காக நடிகர் கருணாஸ், பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று திரைப்படத்திற்காக நடிகர் கார்த்திக் மற்றும் சீயான் விக்ரம் , வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்காக நடிகர் சிம்பு, திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் ராக்கெடிரி திரைப்படத்திற்காக நடிகர் மாதவன்,டானாகாரன் திரைப்படத்திற்காக நடிகர் விக்ரம் பிரபு ஆகியோ இடம்பெற்றிருக்கிறார்கள்.

- Advertisement -

இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அனைத்து நடிகர்களுமே ஒருவருக்கொருவர் சலிக்காமல் அந்தந்த கதாபாத்திரங்களில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்கள். இதனால் இந்த விருதை பெற்று செல்ல போகும் அந்த திறமைசாலி யார் என்பது ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதே போல்  2022 ஆம் ஆண்டில் சிறந்த திரைப்படத்திற்கான நாமினேஷன் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இயக்குனர் மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி ,இயக்குனர் கௌதம்  இயக்கிய வெந்து தணிந்தது காடு ,  கார்கி,  குதிரைவால், டானாகாரன், இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது, இயக்குனர் அருண்ராஜ் காமராஜ் இயக்கிய நெஞ்சுக்கு நீதி மற்றும் இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் ஆகிய திரைப்படங்கள் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. இந்தப் பட்டியலில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் அஜித் நடித்த வலிமை போன்ற திரைப்படங்கள் இடம்பெறவில்லை

Most Popular