சினிமா

2022ஆம் ஆண்டின் கடைசி படங்கள்.. ஒரே நாளில் 6 படம் ரிலீஸ்.. எதை பார்க்கலாம்?

2022 ஆம் ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று 6 தமிழ் படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. பொங்கல் முன்னிட்டு வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. இதன் காரணமாக ஜனவரி மாதத்தில் எந்த தமிழ் படங்களும் திரைக்கு வர வாய்ப்பு இல்லை. இதனால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வரிசையாக 6 தமிழ் படங்கள் நாளை ரிலீஸ் ஆகிறது.

Advertisement

இதன் மூலம் ஜனவரி மாதம் முதல் 10 நாட்கள் வரை கிடைக்கும் வசூல் இந்த சின்ன பட்ஜெட் படங்களுக்கு போதுமானதாக இருக்குமா என்ற கேள்வியும் கூடவே இருந்துள்ளது. எனினும் புத்தாண்டை திரையரங்கில் கழிக்க காத்திருக்கும் ரசிகர்களுக்கு எந்த படத்தை தேர்வு செய்யலாம் என்று குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். அதற்காகத்தான் இந்த செய்தி தொகுப்பு. பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா மாறுபட்ட வேடத்தில் நடிக்கும் படம் செம்பி. மைனா படத்தை போல் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு உருவாக்கியுள்ள இந்த படம் பத்திரிகையாளர்களுக்காக ஒளிபரப்பப்பட்ட காட்சிகளில் நல்ல விமர்சனங்களை பெற்று இருக்கிறது. ஆனால் இந்த படம் ஜாலியாக செல்லும் வகையில் நிச்சயம் இருக்காது. இதனால்  நல்ல படத்தை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக செம்பிக்கு செல்லலாம்.

எனக்கு ஜாலியான படம் தான் வேண்டும் என நினைத்தால் செம்பியை தவிர்த்து விட்டு ஓ மை கோஸ்ட் படத்திற்கு செல்லலாம். சன்னி லியோன் , சதீஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். சன்னி லியோன் ராணியாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். படத்தின் டிரைலரும் ரசிக்கும் வகையில் இருந்தது. படத்தில் சின்ன சின்ன மைனஸ் இருந்தாலும் புத்தாண்டுக்கு இது நல்ல சாய்ஸாக இருக்கலாம்.

Advertisement

எனக்கு நல்ல ஆக்சன் படம் தான் வேண்டும் என்று நினைத்தால் ராங்கி படம் நல்ல சாய்ஸாக இருக்கும். ஏ ஆர் முருகதாஸ் எழுதிய கதை என்பதால் தைரியமாக படத்திற்கு செல்லலாம். நடிகை திரிஷா ஆக்சன் காட்சிகளில் முதல்முறையாக நடித்து கலக்கியிருக்கிறார். இதனால் ராங்கி படமும் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சகுந்தலாவின் காதலன் என்ற திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது. பேரை கேட்டவுடனே உப்புமா படம் என்று நினைத்து விட வேண்டாம். இதில் சுமன், பசுபதி ,மொட்டை ராஜேந்திரன், கருணாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். படத்தின் டிரைலரும் நம்பிக்கை கொடுக்கும் வகையில் இருக்கிறது. சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயமாக இந்த படத்துக்கு சென்று வரலாம்.

அருவா சண்டை என்ற மற்றொரு சிறு பட்ஜெட் படமும் திரைக்கு வருகிறது.. கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் ஜாதி அரசியலும் பேசப்பட்டு இருக்கிறது. படத்தில் எடிட்டிங் நடிப்பு உள்ளிட்ட விஷயங்களில் குறை நிச்சயமாக இருக்கும். ஆனால் படம் பேசப்படும் கதையும் கபடி காட்சிகளும் ட்ரைலரில் கவரும் வகையில் இருக்கிறது. இதனால் அருவா சண்டையும் பார்ப்பதில் தவறில்லை.

Advertisement

ஜிப்ரான் இசையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் டிரைலரும் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கிறது. ஒரு பெண் டிரைவர் கொலையாளியை ஏற்றி செல்லும் போது என்ன நடக்கிறது என்று திரில்லர் கதையை களத்தைக் கொண்டு படம் எடுக்கப்பட்டிருக்கிறது .இதனால் உங்கள் ரசனைக்கு ஏற்ப படத்துக்கு தேர்வு செய்து திரையரங்கில் பார்த்து புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுங்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top