தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து வைத்திருப்பவர் நடிகர் ரகுவரன். அவருடைய இடத்தை இன்றளவும் யாராலும் ஈடு செய்ய முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.
வில்லன் கதாபாத்திரங்களில் வெளுத்து கட்டிய ரகுவரன் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தோன்றினால் அனைவரையும் கண்கலங்க செய்து விடுவார்.
சம்சாரம் அது மின்சாரம், பாட்ஷா ,முத்து, முதல்வன், லவ் டுடே, யாரடி நீ மோகினி போன்ற படங்கள் இன்றளவும் ரகுரனை நம் நெஞ்சில் நிறுத்தும்.
சங்கரின் முதல்வன் படத்தில் முதலமைச்சராக ரகுவரன் நடித்த காட்சிகள் ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாதது. அதிலும் “ஒரு நாள் முதலமைச்சராக இந்த நாற்காலியில் உட்கார்ந்து பார் “என்று அர்ஜுனிடம் ரகுவரன் சவால் விடுவது போல் பேசும் வசனங்கள் பாராட்டை பெற்றது.
லவ் டுடே, யாரடி நீ மோகினி, போன்ற படங்களில் தந்தையாக அவர் நடித்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது..!
இதற்கு மேல் அந்த கதாபாத்திரத்தை யாராலும் செய்திருக்க முடியாது என்றால் அது மிகையாகாது. …
தென்னகத்து அமிதாபச்சன் என்று சொல்லும் அளவிற்கு உயரமான தோற்றத்தை கொண்டவர் ரகுவரன். தோற்றத்தில் மட்டுமில்லாமல் குணத்திலும் பிறருக்கு அள்ளிக் கொடுத்து உதவுவதிலும் உயர்ந்தவராகவே இருந்தார்..
நடிப்பில் அசுரன் ஆன ரகுவரன், தனக்கென ஒரு நடிப்பின் இலக்கணத்தை வகுத்துக் கொண்டவர்..அவர் நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ரிஷி என்ற மகனும் உள்ளார் .
தன் மகன் மீது அதிக அன்பும் அக்கறையும் கொண்டு இருந்தார்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் தன் மகனான ரிஷி ஒரு குதிரையை பார்த்து ஆச்சரியப்பட்டு உள்ளார். அதற்கு ரகுவரன் நிஜ குதிரை ஒன்றை வாங்கி தன் மகனுக்கு பரிசாக கொடுத்துள்ளார்.
அப்படி இருக்கும் பொழுது தன் மனைவி ரோகினி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்வதாக முடிவு செய்தனர்.ஆனால் தன் தாயார் ரோகினி உடன் வசிக்கும் ரிஷி யை காண முடியாமல் ரகுவரன் தவித்து வந்துள்ளார்.
குடிப்பழக்கத்தை பாதியில் நிறுத்தி இருந்த ரகுவரன் மீண்டும் குடிப் பழக்கத்திற்கு ஆளானார் .
மகனைப் பிரிந்ததில் மிக மன உளைச்சலில் இருந்த அவர் ,தனுஷின் யாரடி நீ மோகினி படத்தை ஒப்பு கொண்டதற்கு காரணமே தன் மகன் போலவே தனுஷ் இருப்பதுதானாம்.
அப்படம் வெளிவரும் முன்பே 2008 ஆம் ஆண்டு ரகுவரன் காலமானார்.
இயற்கையின் மடியில் இளைப்பாற சென்ற ரகுவரனின் இழப்பை தமிழ் திரை உலகத்தால் இன்றளவும் அவருடைய இடத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை என்பது கசப்பான உண்மை…!