நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது தொடர்ந்து வன்மத்தை ப்ளூ சட்டை மாறன் கொட்டி வருகிறார். ஜெய்லர் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு ரஜினி ரசிகர்களை வம்பு இழுத்து வரும் ப்ளூ சட்டை மாறன் தற்போது ஒரு படி மேல் பொய் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கடுப்பேற்றி இருக்கிறார்.
இன்று காலை ப்ளூ சட்டை மாறன் ஆங்கிலத்தில் ஒரு நீண்ட பதிவை போட்டிருந்தார். அதில் நடிகர் ரஜினிகாந்த் இமயமலை செல்வதற்கு முன்பு படத்தை யூடியூபில் ரிவ்யூ செய்பவர்களை அழைத்து ஒரு பார்ட்டி கொடுத்ததாகவும், அதில் தம்மை அழைத்து சமாதானம் பேச முயற்சி செய்ததாகவும் கூறியுள்ளார்.
செய்யாறு பாலு என்ற நபர் மூலம் தமக்கு அழைப்பு வந்ததாகவும் அதில் தம்மை பற்றி தொடர்ந்து பாதகமான விஷயங்களை போடுவதை நிறுத்திக் கொள்வதற்காக ரஜினி தம்மை சந்தித்து பேச விரும்புவதாக அந்த நபர் கூறினார் என்று ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அந்த நிகழ்ச்சிகள் தான் பங்கேற்க வேண்டுமென்றால் ரஜினி சந்திக்கும்போது வீடியோவை நான் எடுக்க அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் நான் ரஜினியை சந்தித்து மன்னிப்பு கேட்டதாக சிலர் பரப்பி விடுவார்கள் என்று தாமும் கூறியதாகவும் முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த ரஜினி தரப்பு பிறகு அதற்கு அனுமதி அளித்ததாகவும் ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.
சினிமாவில் உள்ள உயர்ந்த நடிகர் ஒருவர் தம்மை அழைக்கும் போது அவர்களை பார்ப்பதுதான் சரி என்று தாமும் சென்று விட்டதாகவும் ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டார். ஆனால் அங்கு சில விரும்பத்தகாத செயல்கள் நடந்ததாகவும் அதன் வீடியோ தம்மிடம் இருப்பதாகவும் இதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடப் போவதாக ப்ளூசட்டை மாறன் கூறினார்.
இதனால் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த நிலையில் ஏதோ ஒரு காமெடி வீடியோவை மீம்சாக போட்டு அனைவரையும் வெறுப்பேற்றினார். இதனால் பலரும் ப்ளூ சட்டை மாறனை வெளுக்க தொடங்கினர்.
தற்போது விளக்கம் கொடுத்துள்ள ப்ளூ சட்டை மாறன், உண்மையிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவும் நடிகர் ரஜினி தன் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு சமூக வலைத்தளத்தில் பிரபலமானவரை பார்த்து பேசியதாக அவர் மீண்டும் கூறியுள்ளார்.