பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் தளபதி விஜயின் ,லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலக அளவில் வெளியாக அதிரடியாக தயாராகிக் கொண்டிருக்கிறது.சூப்பர் ஸ்டாருக்கும் தளபதி விஜய்க்கும் சிண்டு முடியும் வேலையை சிறப்பாக பலர் செய்து கொண்டிருக்கும் வேளையில்,! அதைப் பற்றி எந்த கருத்தையும் சொல்லாமல் ,ஏன் காதில் கூட வாங்கிக் கொள்ளாமலே! விஜய் நார்வே நாட்டிற்கு தன்னுடைய விடுமுறையை கழிக்க கூலாக சென்று விட்டார் தளபதி விஜய்.
தன் படத்தின் ஆடியோ ரிலீஸ் என்றாலே !ஒரு குட்டி கதையையும் ,ஒரு சிறப்பான செய்தியையும் ! ரசிகர்களுக்கு போனஸாக கொடுப்பது தளபதி விஜயின் வழக்கமாக இருந்து வருகிறது.
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியது பெரும் கொந்தளிப்பை விஜய் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
அதற்கு விஜய் தன் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது அதற்கான தக்க பதிலடியை தனது வழக்கமான பாணியில் கொடுப்பார் என்று ஏக்கத்துடன் காத்திருந்து வருகின்றனர் ரசிகர்கள்.
இதனாலேயே லியோ இசை வெளியீட்டு விழாவை, திருவிழாவை போல் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு, முதலில் அது மலேசியாவில் நடைபெற போவதாகவும் பின்பு துபாயில் நடைபெற போவதாகவும் செய்திகள் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியது.
ஆனால் இன்ப அதிர்ச்சியாக லியோவின் இசை வெளியீட்டு விழா சென்னையில் தான் நடக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் இப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார்.
சமீபத்தில் மகாராஜா படத்தின் பர்ஸ்ட் லுக்கில் கலந்து கொண்டு பேசிய லலித் குமார், லியோ திரைப்படத்தின் முதல் பகுதியை பார்த்து விட்டதாகவும் ! உடனே ப்ளோமின் ராஜை மிகச் சிறப்பாக உள்ளது என்று பாராட்டியதாகவும் கூறினார்.ப்ளோமின் ராஜ் லியோவின் எடிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனே லோகேஷ் கனகராஜ் நான் தான் லியோவின் இயக்குனர், நீங்கள் எடிட்டரை பாராட்டுகிறீர்களே ? என்று நகைச்சுவையாக கூறினாராம்..அதுமட்டுமில்லாமல் அக்டோபர் 19ஆம் தேதி வரை அடுத்தடுத்து லியோவின் அப்டேட்டுகள் “தினம் தினம் தீபாவளி” என்று ரசிகர்களை வந்தடைய இருப்பதாக கூறி மேலும் மகிழ்வித்தார் ..!
லியோவின் இசை வெளியீட்டு விழா நிச்சயமாக சென்னையில் நடக்கும். ஆனால் எந்த இடம் என்பது இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்றும் கூறினார்.. நீ வாண்ணா !வாண்ணா என்று குட்டி ஸ்டோரியில் ஒளிந்திருக்க போகும் சம்பவத்திற்காக இப்பொழுதே தயாராகி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.