ஆரம்பக் காலத்தில் பெண்கள் தன் கணவனை ஐயனே! சுவாமி என்றெல்லாம் மரியாதை நிமித்தமாக அழைத்து வந்தார்கள். பின்பு அவையெல்லாம் மாறி அத்தான்! மாமா! இன்னும் சிலர் என்னங்க என்றும் செல்லமாகவும் மரியாதையாகவும் தன் கணவரை அழைத்து வந்தார்கள்.
இதுவெல்லாம் கணவனின் பெயரை சொல்ல சங்கோஜப் படும் மனைவிமார்கள். வாழ்ந்த காலத்தில் அழைக்கப்பட்ட பெயர்கள். ஆனால் கணவனின் பெயரை சர்வ சாதாரணமாக கூப்பிட்டு வருவதுடன் வாடா போடா என்றும் உரிமையாக அழைத்து வருகிறார்கள். இந்த காலத்து பெண்கள் இதுவெல்லாம் பலரும் அறிந்த சாதாரண விஷயமாகவே ஆகிவிட்டது.
இது நாம் அந்த காலத்தில் இருந்து இன்று வரை உள்ள சினிமாக்களை பார்த்தாலே இந்த மாற்றத்தை தெரிந்து கொள்ள முடியும். அதிலும் சில மாற்றம் தற்பொழுது நிகழ்ந்து வருகிறது. தன்னுடைய சொந்த கணவரையே ஏதோ அலுவலகத்தில் தன்னைவிட உயர் அதிகாரியை கூப்பிடுவது போல் சார் என்றும் ஐயா என்றும் அழைத்து வருகிறார்கள். இதற்கு காரணம் தற்பொழுது சன் டிவி விஜய் டிவி ஜீ தமிழ் போன்ற சேனல்களில் வெளியாகும் தொடர்களினால் ஏற்பட்ட மாற்றம் ஆகும்.
இதுபோன்ற சேனல்களில் ஒரே கதையை தான் பல பெயர்களை வைத்து தொடராக்கி வருகிறார்கள். ஆரம்பத்தில் இதை ரசிகர்களும் வரவேற்று வந்தார்கள். ஆனால் அதையே வழக்கமாக்கி விட்டார்கள்.தொடர்களில் இயக்குனர்கள் ஆரம்பத்தில் வெளிவந்த ராஜா ராணி என்ற நாடகத்தில் தான் இது முதல் முதலில் அறிமுகமானது.
அதில் நடித்த நடிகை ஆலியா மானசா தான் வீட்டு வேலை செய்யும் வீட்டின் முதலாளியின் மகனை திருமணம் செய்து கொண்டு மனைவியானதால் அவர் அவரை சின்னையா என்று கூப்பிட்டு வந்தார். அது அப்பொழுது மிகவும் வைரலான ஒரு பெயராக இருந்தது.
அதை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்ட செம்பருத்தி சீரியலில் நடிகை ஷபானா தன் முதலாளியின் மூத்த மகனை திருமணம் செய்து கொண்டு பெரிய ஐயா என்று அழைத்து வந்தார்.இவையெல்லாம் ரசிகர்கள் ரசிப்பதுடன் விடாமல் அதை வழக்கமாகவும் தொடங்கி விட்டார்கள்.
இதைத் தொடர்ந்து சன் டிவியில் வெளியான ரோஜா சீரியலில் அர்ஜுன் சார் என்றும் தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்டு கொண்டு வரும் சீரியல் கார்த்திக் சார்,ஹஸ்பன்ட் சார் என்றெல்லாம் பெயர்களை வைத்து தங்களின் கணவர்களுக்கு கூப்பிடும் கதாநாயகிகளை பார்த்து, சாமானிய பெண்களும் கற்றுக் கொண்டு வருகிறார்கள்.
அவர்களும் தன் கணவன்மார்களை சார் என்று கூப்பிட்டு வருவது வழக்கமாக இருக்கிறது .இதுவெல்லாம் ரசிக்கும் வண்ணம் சுவாரசியமாக இருந்தாலும் அதனுடைய கதைகளில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை.தன்னைவிட கீழே வேலை செய்யும் பெண்ணை ஒரு எஜமானி திருமணம் செய்து கொள்வதும் ஆரம்பத்தில் இருவருக்கும் பொருத்தமில்லாமலோ குடும்பத்தில் சம்மதம் இல்லாமலோ இருந்து எப்படி அதை சரி செய்து சேர்கிறார்கள் என்பதுதான் கடைசி வரை தொடராக இருக்கிறது. இதில் தற்பொழுது ரசிகர்கள் எந்த ஆர்வமும் காட்டுவதில்லை என்பதால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தொடர்களுக்கு தற்பொழுது வரவேற்பு குறைந்து இருக்கிறது.