நடிகர் விஜயகாந்த் தனது 71 வது வயதில் இன்று காலமானார். இது ஒட்டுமொத்த உலக தமிழர்களுக்குமே சோகமான செய்தியாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த் எவ்வளவு நன்மைகளை செய்து இருக்கிறார். அவர் செய்த தர்மங்கள் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
நடிகர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக மோசமடைந்து தான் இருக்கிறது. ஆனால் இவ்வளவு ஆண்டுகளும் அவர் உயிருடன் இருந்தார் என்றால் அது அவர் செய்த நன்மைகள் தான். சினிமா உலகில் நடிகருக்கு ஒரு உணவு ,வேலை செய்பவர்களுக்கு தரம் குறைந்த உணவு என்று இரண்டு வகை உணவுகள் வழங்கப்பட்டு கொண்டிருந்தது.
இந்த முறையை மாற்றியவர் நடிகர் விஜயகாந்த் தான்.இனி சினிமா உலகில் நான் என்ன உணவு சாப்பிடுகிறேனோ அதே உணவு கடைசி தொழிலாளி வரை இருக்க வேண்டும். எனக்கு இலை விரித்து சாப்பாடு என்றால் கடைசி லைட் மேன் வரைக்கும் அதே மாதிரி இலை போட்டு உணவு வைக்க வேண்டும் என்று மாற்றத்தைக் கொண்டு வந்தவர் விஜயகாந்த் தான்.
விஜயகாந்த் அரிசி மில் ஓனர் என்றாலும் சினிமாவில் வாய்ப்பு தேடும் போது பல கஷ்டங்களை பட்டிருக்கிறார்.இதனால் சாப்பாட்டு கஷ்டம் எப்படி இருக்கும் என்பதை அறிந்த விஜயகாந்த் தாம் நட்சத்திர அந்தஸ்து பெற்ற பிறகு தன்னுடைய அலுவலகத்தில் எப்போதுமே மதிய வேலை 200 பேருக்கு சாப்பாடு கிடைக்கும் வசதியை கொண்டு வந்தவர்.
துணை இயக்குனர்கள் சினிமா ஊழியர்கள் என பலரும் சாப்பிடுவதற்காகவே அங்கு சென்று வருவார்களாம். 2000-ம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயகாந்த் நஷ்டத்தை இயங்கி வந்த சங்கத்தை லாபம் அடைய செய்தது மட்டுமல்லாமல் பல கஷ்டப்பட்ட நடிகர்களுக்கு உதவியும் செய்து வந்திருக்கிறார்.
மேலும் பல சினிமா கலைஞர்களின் குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டு கல்வி செலவையும் நடிகர் விஜயகாந்த் ஏற்று இருக்கிறார். இதை நடிகர் தனுஷின் தந்தை வெளிப்படையாகவே பேட்டியில் கூறியிருந்தார். தாங்கள் மக்கள்கள் படித்த பள்ளியில் விஜயகாந்த் அவர்களால் பல குழந்தைகள் சேர்க்கப்பட்டு இலவச கல்வி உணவு அவரால் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
இப்படி விஜயகாந்த் பல எண்ணற்ற உதவி செய்ததால் தான் அரசியலில் முதல் தேர்தலிலே வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அவருடைய உடல் நலம் மட்டும் ஆரோக்கியமாக இருந்திருந்தால் இந்நேரம் விஜயகாந்த் பல உச்சத்தை அரசியலிலும் தொட்டு இருப்பார். தமிழ் சினிமா உள்ளவரை நடிகர் விஜயகாந்தின் புகழ் என்றும் அழியாது.