Thursday, November 28, 2024
- Advertisement -
Homeசினிமாஜனகராஜுக்கு உலகநாயகன் செய்த அநீதி..! குணா திரைப்படத்துக்கு பிறகு இவர்கள் இணைந்து நடிக்காததற்கு இதுதான் காரணம்..?

ஜனகராஜுக்கு உலகநாயகன் செய்த அநீதி..! குணா திரைப்படத்துக்கு பிறகு இவர்கள் இணைந்து நடிக்காததற்கு இதுதான் காரணம்..?

அந்த காலத்தில் இருந்தே கதாநாயகன் கதாநாயகி பொருத்தத்தை விட கதாநாயகனுக்கும் நகைச்சுவை நடிகனுக்கும் பொருத்தம் இருந்தால் அந்த திரைப்படம் வெற்றி அடைந்து விடும். தற்பொழுது சிவகார்த்திகேயன், சூரி சந்தானம் ,ஆரியா போன்ற காம்போக்களில் வெளிவரும் திரைப்படங்கள் நகைச்சுவையாலே வெற்றியடைகிறது.

- Advertisement -

அது போன்று தான் 80களில் நடிகர் கமலஹாசனும் நடிகர் ஜனகராஜ் இணைந்து நடித்தால் அந்த திரைப்படத்தை அவர்களுக்காகவே பார்க்கும் ரசிகர்கள் இருந்தார்கள். நாயகன் ,அபூர்வ ராகங்கள் ,தூங்காதே தம்பி தூங்காதே, உன்னால் முடியும் தம்பி, வெற்றி விழா ,காதல் பரிசு ,சத்யா, சூரசம்காரம், ஒரு கைதியின் டைரி ,விக்ரம் ,உயர்ந்த உள்ளம், குணா போன்ற திரைப்படங்களில் நடிகர் கமலஹாசன் உடன் ஜனகராஜ் இணைந்து நடித்தது தான் திரைப்படங்களின் வெற்றிக்கு பாதி காரணமாக அமைந்தது.

இதில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த குணா திரைப்படத்தில் ஜனகராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்⁷ .குணா திரைப்படத்தின் இயக்குனர் சந்தான பாரதி,நடிகர் கமலஹாசன், ஜனகராஜன் மற்றும் குணா திரைப்படத்திற்கு நடிகனாகவும், ஒளிப்பதிவாளராக இருந்த ஆர் எஸ் சிவாஜி ஆகியோரெல்லாம் நெருங்கிய நண்பர்களாக அப்பொழுது இருந்து வந்தார்கள். இதில் ஆர்.எஸ் சிவாஜி அதிகமாக உலக நாயகனின் தயாரிப்பில் வெளிவரும் திரைப்படங்களில் நடித்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் குணா திரைப்படத்திற்கான டப்பிங் பணியில் ஜனகராஜ் டயலாக் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அதை சரி பார்த்துக் கொண்டிருந்த ஆர்.எஸ் சிவாஜி ஒரு வசனம் கொஞ்சம் நான்சிங்காக உள்ளது மீண்டும் பேசுங்கள் என்று கூறி இருக்கிறார். ஜனகராஜ் மீண்டும் அதை பேசி முடித்தாராம் .

- Advertisement -

ஆனால் திரைப்படத்தின் இயக்குனரான சந்தான பாரதி எனக்கு இது திருப்தி இல்லை மீண்டும் ஒருமுறை பேச வேண்டும் என்றாராம். அதை ஒப்புக் கொள்ளாமல் ஜனகராஜ் நான் தான் பேசி விட்டேன் அடுத்த டேக்  போகலாம் என்று கூறியிருக்கிறார் .இப்படி இருவருக்கும் வாக்குவாதம் ஆகி சந்தன பாரதி ஜனகராஜ் அடிப்பதற்கு கை ஓங்கி விட்டாராம் .இதனால் ஆத்திரமடைந்த ஜனகராஜ் டப்பிங் பணி பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேறி விட்டாராம்.

இந்த செய்தியை தெரிந்த கமலஹாசன் தன்னுடைய திரைப்படத்தின் இயக்குனர் என்பதால் சந்தான பாரதிக்கு சப்போர்ட் செய்து ஜனகராஜின் நட்பை இழந்துவிட்டார் .இதனால் மனமுடைந்த ஜனகராஜ் அதன் பிறகு உலக நாயகனுடன் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. ஒரு வழியாக ஏதேதோ பேசி டப்பிங் பணியை மட்டும் ஜனகராஜ் முடித்துக் கொடுத்திருக்கிறார் .அதன் பிறகு இருவரும் தொடர்பு இன்றி போய்விட்டார்களாம் .அவர்கள் காம்போவை மீண்டும் திரையில் பார்க்க முடியாமல் போனதற்கு இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

Most Popular