தமிழ் டாக்கீஸ் யூடியூப் சேனலில் 10 ஆண்டுகளுக்கு மேலாக திரை விமர்சனம் செய்து கொண்டிருப்பவர் ப்ளூ சட்டை மாறன். இவரது விமர்சனங்கள் அடுத்தவரை காயப்படுத்தும் விதத்தில் அமைவது மாறாத ஒன்று. முன்னணி நடிகர்கள் அஜித்குமார், சிம்பு ஆகியோரை உருவ கேலி செய்தும் இருக்கிறார். ரசிகர்கள் பலரது வன்மத்தை இந்த ப்ளூ சட்டை மாறன் சேகரித்துள்ளார். நகைச்சுவை என்ற பெயரில் கீழ்த்தனமான விமர்சனம் செய்து யூடியூப்பில் சம்பாதிக்கிறார்.
சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் விமர்சன வீடியோவில் வழக்கம் போல படத்தை மட்டம் தட்டி பேசியுள்ளார். நேர்காணல் ஒன்றில் இதைப் பற்றி இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்னிடம் கேட்ட போது அவர், “ ப்ளூ சட்டை விமர்சனைத்தைப் பார்க்கையில் அளவில்லா வெறுப்பு வருகிறது. அவரை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் இளக்காரமாக செய்ய வேண்டாம் எனத் தான் கூறுகிறேன். முன்னணி இயக்குனர் யாரும் இதைப் பற்றி பேச மாட்டார்கள். நீங்கள் கேட்பதால் கூறுகிறேன். களத்தில் இறங்கி அவரை எதாவது செய்ய வேண்டுமென்ற அளவிற்கு கோபம் வருகிறது.” என்றார்.
ப்ளூ சட்டை மாறனை @tamiltalkies
— Name (@YourNanban) September 20, 2022
இறங்கி செய்ய போகும் @menongautham pic.twitter.com/NUJUa7SZaH
பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனை யாராவது பகைத்துக் கொண்டால் உடனவே அவர்களை பற்றி தன் சமூக வலைதளத்தில் அசிங்கப்படுத்த ஆரம்பித்ததுவிடுவார். இரவின் நிழல் படத்தின் போது இவருக்கும் இயக்குனர் பார்திபனுக்கும் இடையே தாறுமாறான சண்டை/வாக்குவாதம் நடைபெற்றது. பல விமர்சன வீடியோக்களின் இறுதியில் பார்திபனைப் பற்றி கிழித்து தள்ளியுள்ளார் ப்ளூ சட்டை மாறன். அந்தப் பிரச்சனை முடிவடைந்தது.
தற்போது கெளதம் வாசுதேவ் மேனனின் பேச்சுக்கு தன் பக்கத்தில் இருந்து பதிலடி கொடுத்துள்ளார். சாதிப்பெயரை பின்னால் போட்டுக்கொள்வதை விரும்பாத தமிழகத்தில் சாதிய அடையாளத்தை பெருமையாக கருதும் ஒரே இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தான் என அவரை தாக்க ஆரம்பித்து விட்டார். மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைகிளி முத்துச்சரம் என முதல் நான்கு படங்களில் இயக்கிவர் கெளதம் என குறிப்பிட்ட அவர் அதன் பின்னர் வாரணம் ஆயிரம் படம் முதல் தன் சாதியை இணைத்து முழு பெயரையும் போடுகிறார். பணம், புகழ் வந்த பின் சாதியை இணைத்து காட்டுகிறாரா என ஒருவர் அந்த பதிவிற்கு ரிப்ளை செய்துள்ளார்.
2001 மின்னலே – கௌதம்
— அம்பேத்கர் சமத்துவ இயக்கம் (@Ambedkar_iyakam) September 20, 2022
2003 காக்க காக்க – கௌதம்
2006 வேட்டையாடு விளையாடு – கௌதம்
2007 பச்சைகிளி முத்துச்சரம் – கௌதம்
2008 வாரணம் ஆயிரம்-
கௌதம் வாசுதேவ் மேனன்
பணம் சேர்ந்த பின் சாதியை பெருமையா போட்டுக்குறதுதானே முறை.!
(ராஜீவ் மேனன்,
சுரேஷ் மேனன்னு சாதிபேரு டைரடக்கர்ஸ் இருக்கானுவ) pic.twitter.com/Jrio2ejtqn
மேனன்.. நீங்க படிச்சி வாங்குன பட்டமா? pic.twitter.com/kjExqR5JrY
— Blue Sattai Maran (@tamiltalkies) September 20, 2022
இறங்கி செய்ய போகிறேன் – வாய்ஸ் ஓவர் மேனன் ஆவேசம்.
— Blue Sattai Maran (@tamiltalkies) September 20, 2022
'ஐயா… வணக்கமுங்க. உங்க சாகசத்துக்கு வைட்டிங்குங்க' pic.twitter.com/Mkzmk7bXoi
இறங்கி செய்தல்..
— Blue Sattai Maran (@tamiltalkies) September 20, 2022
1. அடியாட்களை ஏவிவிட்டு அடித்தல்?
2. வழக்கு போட்டு சிறையில் தள்ளி சிரித்தல்?
3. ENPK, VKN போல அடுத்ததாக இன்னொரு ஹீரோ மார்க்கெட்டை காலி செய்தல்?
4. தன் படத்தில் வருவதுபோல Lower Basement parking இல் இறங்கி துப்பாக்கியால் சுடுதல்?