Thursday, November 28, 2024
- Advertisement -
Homeசினிமாதுணிவு அப்டேட்: தாய்லாந்து நாட்டில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு; எப்போது முடிகிறது? அஜித்தின் அடுத்த பிளான் என்ன?...

துணிவு அப்டேட்: தாய்லாந்து நாட்டில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு; எப்போது முடிகிறது? அஜித்தின் அடுத்த பிளான் என்ன? – வெளியான தகவல்கள்!

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் “துணிவு” படத்தில் அஜித் குமார் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி 55 நாட்களுக்கு மேல் நடந்தது. முதல் கட்ட படப்பிடிப்பில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கி முடித்தனர்.

- Advertisement -

அதன்பின்பு படத்தொகுப்பு வேலைகள் நடைபெற்றன. அந்த சமயத்தில் நடிகர் அஜித்குமார் தன்னுடைய குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தார். சென்னை திரும்பிய அவர் மீண்டும் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு வேலைகளுக்காக கடந்த 23ஆம் தேதி நடிகர் அஜித்குமார் தாய்லாந்து புறப்பட்டார். தாய்லாந்தில் 18 நாட்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்தது. இன்றுடன் படப்பிடிப்பு வேலைகள் தாய்லாந்து நாட்டில் நிறைவடைகிறது. ஏற்கனவே அறிவித்தபடி பொங்கல் பண்டிகைக்கு இந்த படத்தை வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் திட்டமிட்டுள்ளார். அதனால் படப்பிடிப்பின் இறுதி கட்டப்பணிகளை விரைவில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டு ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

மேலும் துணிவு படத்தின் பணி முடிந்தவுடன் மீண்டும் அஜித் குமார் பலவேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்வதாக முடிவு செய்துள்ளதாகவும், இம்முறை 62 நாடுகளுக்கு சுற்றுலா செல்ல இருப்பதாக தகவல்கள் வருகிறது.

- Advertisement -

Most Popular