ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியானது. கத்தி படத்திற்கு பிறகு படத்தின் பெயரை ப்ரோமோ மூலம் பட குழு வெளியிட்டு இருக்கிறது. தளபதி 67 படத்திற்கு லியோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் நடிகர் விஜய் சாக்லேட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
அப்போது டிப் டாப் உடை அணிந்து பார்ப்பதற்கு கச்சிதமாக இருக்கும் விஜய் அதே நேரம் மாலையில் ரண கொடூரமாக கத்தியை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.அப்போது விஜய்யை தாக்குவதற்காக பெரிய அளவிலான கார் முகமூடி போட்ட கும்பல் வருகிறது. அப்போது விஜய் தாம் தயாரித்து வைத்துள்ள சாக்லேட்டில் கத்தியை உள்ளே விட்டு எடுக்கிறார். மேலும் சாக்லேட்டை ருசித்தபடி பிளடி ஸ்வீட் என்று கூறி வில்லன்களை பார்த்து திரும்புகிறார்.
இப்படியாக டீசர் முடிகிறது. இந்த டீசரின் பெரிய பலமே அனிருத் ஹாலிவுட் தரமான மியூசிக் தான். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அளவுக்கு லியோ டீசரின் இசை இருக்கிறது. மேலும் இந்தப் படத்தின் டீசர் மேக்கிங் இதுவரை பார்க்காத அளவிற்கு மிகவும் நேர்த்தியாகவும் ஹாலிவுட் தரத்திற்கும் உள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் டீசரிலே படம் அக்டோபர் 19ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகும் என்று படக் குழு அறிவித்திருக்கிறது.
பூஜை விடுமுறை வருவதால் அதனை மையமாக வைத்து லியோ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. எனினும் லியோ என்ற பெயர் மாநகரம், நகரம் போன்ற இடத்தில் எளிதாக புரியும். ஆனால் விஜயின் அதிக ரசிகர்களுடைய கிராமப்புறத்திற்கு இந்த பெயர் பரிச்சயமாக இருக்குமா என்று கொஞ்சம் சந்தேகம் தான். இதேபோன்று இந்த படம் விக்ரம், கைதி ஆகியவற்றின் தொடர்ச்சியா இல்லை மாஸ்டரை போல் இதுவும் தனி படமா என்பது குறித்து லோகேஷ் கனகராஜ் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும் இந்த படத்தில் விஜய் சாக்லேட் தயாரிக்கும் காட்சி மிகவும் தத்துரூபமாகவும் பார்ப்பதற்கு நாமே அந்த சாக்லேட்டை சாப்பிட தூண்டும் விதமாகவும் அமைந்திருக்கிறது. இந்த டீசரை பார்த்தாலே படம் மெகா ஹிட் அடையும் என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.