நடிகர் விஜய்யின் 67வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருவது தான் தமிழ் சினிமாவில் பேசு பொருளாக மாறி வருகிறது. இந்தப் படத்திற்கான டைட்டிலை அறிவிக்க ஒரு வீடியோவை நேற்று லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். இது வெளியான உடன் சமூக வலைத்தளத்தில் தீ போல் பரவி ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது.
இந்த வீடியோவிற்கு மேலும் பலம் சேர்த்தது அனிருத்தின் இசைதான் என்றால் அது மிகையல்ல. ஐ அம் ஃபையர் ப்ரூப் என்ற பாடல் கேட்போரை ரசிக்கும் படி மிரட்டலாக அமைத்திருக்கிறார். இந்த பாடல் ரசிகர்களுக்கு பிடித்ததை அடுத்து ஸ்பாட்டிபை, அமேசான் போன்ற நிறுவனங்கள் தங்களது தளத்தில் இந்த பாடலை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் லியோ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ப்ரோமோ வீடியோ இந்திய அளவில் பெரிய சாதனையை படைத்துள்ளது. அதாவது படத்தின் பெயரை அறிவிக்கும் வீடியோவுக்கு அதிக லைக், அதிக பார்வையாளர்கள் பெற்று விஜய் படம் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு முன்பு ஷாருக் கானின் ஜவான் மற்றும் பத்தான் திரைப்படம் இந்த சாதனையை படைத்திருந்த நிலையில் அதனை வெறும் ஆறு மணி நேரத்தில் விஜயின் லியோ முறியடித்திருக்கிறது.
இதேபோன்று ஹிந்தி, தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆவதால் அந்தப் பெயர் வட இந்தியாவில் டக்கென்று பரீட்சையமாகிவிட்டது. பலரும் இந்த வீடியோவை பார்த்து நடிகர் விஜய்யையும் லோகேஷ் கனகராஜையும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். மேலும் அனிருத் தமிழ் சினிமாவை விட்டு பாலிவுட்டில் நிரந்தரமாக குடியேற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மதியம் ஒரு மணி நிலவரத்தின் ரியல் டைம் வியூஸ் படி லியோமோவை சுமார் 2 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். 11 லட்சம் பேர் லைக் போட்டு இருக்கிறார்கள்.இது ஷாருக்கானின் படத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.