Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாஆசிய விருது : 6 பிரிவுகளின் கீழ் பொன்னியின் செல்வன் பரிந்துரை.. !

ஆசிய விருது : 6 பிரிவுகளின் கீழ் பொன்னியின் செல்வன் பரிந்துரை.. !

கோலிவுட் மற்றும் இந்திய சினிமாவின் பெருமையான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்னம் & கோ வெற்றிகரமாக உருவாக்கி முதல் பாகத்தை சென்ற ஆயுத பூஜைக்கு வெளியிட்டனர். படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு, டிக்கெட் கிடைக்காமல் பலர் தவித்தனர். சில திரையரங்குகள் 24 மணி நேரமும் படத்தை திரையிட்டனர். உலகெங்கும் மொத்தம் 500 கோடிக்கு மேல் வசூல் ஆனது.

- Advertisement -

லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இப்படம் ஹாங்காங்கில் நடைபெற்ற 16வது ஆசிய திரைப்பட விருது விழாவில் 6 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படத்திற்கு இரு தயாரிப்பு நிறுவனங்களும், சிறந்த இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், சிறந்த ஒளிப்பதிவுக்கு ரவி வர்மன், சிறந்த எடிட்டிங்க்கு ஶ்ரீகா் பிரசாத், சிறந்த புரொடக்ஷன் வடிவமைப்புக்கு தோட்டா தரணி மற்றும் கடைசியாக சிறந்த ஆடை வடிவமைப்புக்கு ஏகா லக்கானியின் பெயர்கள் பட்டியலில் இணைந்தன.

சோகம் என்னவென்றால் இத்திரைப்படம் வெறும் பரிந்துரை அளவு மட்டுமே முன்னேறியது, விருதுகளை வெல்லத் தவறியது. படக்குழு சார்பாக ஜி.கே.எம்.குமரன், சிவா ஆனந்த், ஶ்ரீகா் பிரசாத் மற்றும் ரவி வர்மன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பொன்னியின் செல்வன் முதல் பாகம் இந்த ஆண்டு விருதுகளை வெல்லத் தவறினாலும் இரண்டாம் பாகத்தில் வெல்ல ஓர் வைப்பு காத்திருக்கிறது, பார்க்கலாம்.

- Advertisement -

மொத்த படமும் ஒரே சமயத்தில் ஷூட் செய்யப்பட்டது. மறுபக்கம் எடிட்டிங் பணிகளும் நடைபெற்றுக் கொண்டே இருந்தது. இதற்கு இடையே தான் பொன்னியின் செல்வன் 1 வெளியானது. இரண்டாம் பாகத்திற்கு மீதமிருக்கும் வேலைகள் எறத் தாழ முடிக்கப்பட்டு புரொமோஷன் பணிகளில் படக்குழு குத்திக்கவுள்ளது. பல்வேறு திருப்பங்கள் கொண்ட பார்ட் 2 அடுத்த மாதம் 28ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

- Advertisement -

Most Popular