துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் தன்னுடைய 62 வது படமான ஏகே 62 என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் அண்மையில் பரவலாக பரவி வந்தது. இந்தத் திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் எது வந்தாலும் அது நிலையாக நிற்பது இல்லை. ஆரம்பத்திலிருந்து பல மாற்றங்களை கொண்டுதான் வருகிறது.
இயக்குனர் ,இசையமைப்பாளர் என்று இந்த திரைப்படத்திற்கு பல மாற்றங்கள் ஏற்பட்டது. இறுதியில் இந்த திரைப்படத்தை இயக்கவும் மகிழ்திருமேனி இயக்குகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆரம்பத்தில் இந்த திரைப்படத்தில் கதாநாயகி யார் நடிகை நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்பொழுது இந்த திரைப்படத்தின் நயன்தாரா நடிக்கப் போகிறாரா இல்லையா என்பது பற்றிய இந்த தகவலும் வெளிவரவில்லை.
இவையெல்லாம் ஒருபுறம் நடந்து முடிந்ததும் ஒரு வழியாக இந்த திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்கவே இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த பொழுது நடிகர் அஜித்தின் தந்தை உடல் நலக்குறைவால் மரணித்தது எதிர்பாராத விதமாக அமைந்தது. தந்தையை இழந்த சோகத்தில் ஏப்ரல் மாதம் முழுவதுமே படப்பிடிப்பை ஈடுபட முடியாது என்று கூறிவிட்டார்.
அதனால் இந்த திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பை வருகின்ற மே மாதம் தொடங்கலாம் என்று முடிவு செய்து தள்ளி வைத்திருக்கிறார்கள். மேலும் இது பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் அடுத்த மாதம் வரும் என்று இந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தமிழ் குமார் கூறியிருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தைப் பற்றிய தகவல் ஆரம்பத்தில் வரும் பொழுது வியோ திரைப்படத்தை போன்று இந்த திரைப்படத்தினுடைய பெயரையும் திரையரங்குகளில் வெளியிடப்படும். தேதியையும் ட்ரைலருடன் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்கள். அதேபோல் இந்த ஆண்டில் இறுதிக்குள் ஏகே 62 திரைப்படம் வெளியிடப்படும் என்றும் கூறுகின்றார். ஆனால் இப்படி படப்பிடித்து தள்ளி போவதால் இத்திரைப்படம் இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்யப்படுமா என்று கேள்வி பலரிடம் எழுந்திருக்கிறது.
எல்லாவற்றையும் தாண்டி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் அந்நாளிற்காக தல ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.