லோகேஷ் கனகராஜ் திரைப்பட வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படமாக இடம்பெற்றது கைதி தான். கைதியின் மூலம் தான் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் என ஒரு திரை பயணமே தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கைதி படம் 100 கோடி ரூபாய் வசூல் பெற்றது. இதனை அடுத்து இந்த படத்தின் உரிமையை ஹிந்தியின் அஜய் தேவகன் வாங்கி அதனை தற்போது ரீமேக் செய்து வெளியிட்டுள்ளார்.
இந்தப் படத்திற்கு போலா என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தற்போது பாலிவுட் ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். தமிழ் கைதி படத்தை பார்த்து உள்ளீர்கள் என்றால் தயவு செய்து இந்த படத்தை பார்க்காதீர்கள் என பாலிவுட் ரசிகர்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த அளவிற்கு படம் மிகவும் மோசமாக எடுக்கப்பட்டிருப்பதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது. கைதி படத்தின் கதையை கொஞ்சம் மாற்றி எடுத்துள்ள அஜய் தேவகன் திரைக்கதையின் கோட்டை விட்டதாக ரசிகர்கள் குற்றம் சட்டி வருகின்றனர். படத்தில் ஆக்சன் காட்சிகள் மட்டும்தான் இருப்பதாகும் மற்றபடி பெரிய லாஜிக் ஓட்டைகள் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
மிகவும் பெரிய பொருட்செலவில் போலா திரைப்படம் எடுக்கப்பட்டது. தற்போது மோசமான விமர்சனம் கிடைத்துள்ளதால் இந்த படமும் மண்ணைக் கவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நரேன் கதாபாத்திரத்தில் தபு நடித்து உள்ளார். நடிப்பை பொறுத்தவரை அஜய் தேவகன் இந்த குறையும் வைக்கவில்லை என்றும் ஆனால் இயக்குனராக அவர் மீண்டும் தோற்று விட்டதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.
லொள்ளுசபாவில் வருவது போல் படத்தின் கதையை கிண்டல் செய்து எடுக்கப்பட்ட படம் போல் போலா இருப்பதாக கருத்து கூறும் ரசிகர்கள் நன்றாக சிரிக்க வேண்டும் என நினைத்தால் மட்டும் இந்த படத்தை காணுங்கள் என கூறியுள்ளனர். கைதி படத்தை எப்படி அடித்து நொறுக்கி இருக்கிறார்கள் என்பதை காண தமிழ் ரசிகர்களும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். தம்பி கார்த்தியின் கைதியே இந்த நிலைமை என்றால் சூரரைப் போற்று என்ன ஆகப் போகிறதோ என்ற கலக்கத்தில் அண்ணன் சூரியா ரசிகர்கள் இருக்கிறார்கள்.