நடிகர் நானி கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் தசாரா. இது நானி திரைப்பட வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் உருவான திரைப்படம் ஆகும். 60 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்ட இந்த திரைப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடா, மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆகி உள்ளது.
இந்த படம் மீது நாணி அதிக நம்பிக்கை இருப்பதாக அவர் பலமுறை பேட்டியில் கூறியிருக்கிறார். இதற்கு காரணம் இந்த படத்தை அறிமுக இயக்குனரான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியிருக்குது தான். அவர் பிரபல இயக்குனர் சுகுமாரின் உதவி இயக்குனராக செயல்பட்டு இருக்கிறார். சமீப காலமாக தெலுங்கு திரைப்படங்கள் வெளி மாநிலங்களில் நல்ல வரவேற்பு பெறுவதால் நாணியும் இந்த படத்திற்கு தீவிரமாக புரமோஷன் செய்தார்.
மும்பை மற்றும் வட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நானி சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதன் காரணமாக படத்திற்கு நல்ல புக்கிங் இருந்தது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்துள்ளது. ஒரு சிலர் படம் ஆகா ஓகோ பிளாக்பஸ்டராக இருப்பதாக கூறினாலும் மற்றொரு சிலர் படம் மிகவும் போர் அடிப்பதாகவும் கதை மெல்லமாக நகர்வதாகவும் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் எப்போதும் ஒரு படம் வெற்றி அடைந்தால் இரண்டாவது நாள் அல்லது மூன்றாவது நாள் தான் கேக் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடுவார்கள். ஆனால் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முதல் காட்சி முடிந்த உடனே ரசிகர்கள் உடன் இணைந்து கேக் வெட்டி படம் வெற்றி பெற்றதாக கொண்டாடினார்கள்.
இதை பார்த்து சில ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒட்டுமொத்தமாக படம் ஒரு காட்சி தான் முடிந்த நிலையில் அதுக்குள்ளே நானி, கீர்த்தி சுரேஷ் இந்த அலைப்பறைகளை செய்வதாக அவர்கள் விமர்சித்துள்ளனர்.இந்த திரைப்படம் போகப்போக தான் ரசிகர்கள் இடையே வரவேற்பு பெற்றதா இல்லையா என்பது குறித்து தெரியவரும்.