தமிழ் சினிமாவில் நேற்று வெளியான மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தையும் மாமன்னன் திரைப்படம் பெற்றுள்ளது.
இதன் காரணமாக திரையரங்குகளில் காட்சிகள் செல்ல கூட்டம் அதிகரித்துள்ளது. வாய் வழியான விமர்சனம் சிறப்பாக இருப்பதால் இந்தப் படத்திற்கான வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மாமன்னன் திரைப்படத்தில் தனித் தொகுதியில் வெற்றி பெறும் வடிவேலு சட்டமன்ற உறுப்பினராக எந்த அளவுக்கு பிரச்சனைகளை சந்தித்தார்.எப்படி அமைச்சர் மற்றும் சபாநாயகராக உயர்ந்தார் என்பதை கூறும் திரைப்படமாக கதைகளம் அமைந்திருக்கிறது.
இது அதிமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த தனபால் தொடர்பான கதை என்று சமூக வலைத்தளத்தில் கூறப்படுகிறது. இது குறித்து தற்போது கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் சபாநாயகர் தனபால் மாமன்னன் திரைப்படம் நான் இன்னும் பார்க்கவில்லை.
நண்பர்கள் உங்கள் கதை போல் இருக்கிறது என்று சொன்னார்கள். நான் 1972 ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் இருக்கின்றேன். அம்மாவின் தீவிர விசுவாசியாக நான் இருந்தேன். என்னுடைய உழைப்பை பார்த்து அமைப்புச் செயலாளர் அமைச்சர் சபாநாயகர் என பொறுப்புகளை வழங்கி என்னை அழகு பார்த்தார்.
என்னுடைய சாயலில் இந்த படம் வந்திருந்தால் அது அம்மாவுக்கு கிடைத்த வெற்றி என்று முன்னாள் சபாநாயகர் தனபால் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் மாமன்னன் திரைப்படம் காட்சிகளில் சிறப்பாக அமைந்திருந்தாலும் திரைக்கதையில் மாரி செல்வராஜ் கோட்டை விட்டதாக கூறப்படுகிறது மேலும் இசையும் பாடலும் படத்திற்கு மைனஸ் ஆக இருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.