Tuesday, July 8, 2025
- Advertisement -
HomeUncategorizedஏன் பயந்து வீட்டுக்குள்ளே மறைந்து வாழ்ற? நீ எல்லாம் ஒரு ஜெண்டில் மேனா? அஜித்தை வெளுத்து...

ஏன் பயந்து வீட்டுக்குள்ளே மறைந்து வாழ்ற? நீ எல்லாம் ஒரு ஜெண்டில் மேனா? அஜித்தை வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் பிரதான தயாரிப்பாளர்களில் ஒருவராக விளங்குபவர் தான் 7 சேனல் நிறுவனத்தின் அதிபர் மாணிக்கம் நாராயணன். இவர் சீனு,மாண்புமிகு மாணவன், வித்தகன் போன்ற பல திரைப்படங்களை எடுத்திருக்கிறார்.

- Advertisement -

இதில் மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் என்றால் அது கமல் நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படம் தான். எனினும் இந்த படம் நன்றாக ஓடினாலும் தயாரிப்பாளராகிய தமக்கு நஷ்டத்தை கொடுத்ததாகவும் மாணிக்கம் நாராயணன் பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் மறு ரிலீஸ் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்று பேசிய தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் நடிகர் அஜித்தை கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டி தீட்டி இருக்கிறார்.

- Advertisement -

நடிகர் அஜித் நம்மிடம் காசு வாங்கியதாகவும் அதற்கு படத்தில் நடிக்கவோ இல்லை. அந்த படத்தை திருப்பித் தரவும் அஜித் முன் வரவில்லை என்றும் கூறியுள்ளார். நடிகர் அஜித் ஒரு ஜென்டில்மேன் என்று அவர் அவரையே சொல்லிக் கொள்கிறார்.

- Advertisement -

ஆனால் அவர் ஜென்டில்மேன் எல்லாம் கிடையாது. தன்னை பற்றி பிறர் பெருமையாக பேச வேண்டும் என்பதற்காக பத்திரிக்கையாளரிடம் மாதம் 20 ஆயிரம் ரூபாய் வழங்குகிறார் .நடிகர் அஜித் ஒரு ஏமாற்றுக்காரர். அவர் உண்மைக்கு பயந்து ஒளிந்து கொண்டு வாழ்கிறார்.

மோசடி செய்பவர்தான் பயந்து கொண்டு ஒளிந்து வாழ்வார்கள். அதனால்தான் அஜித் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார். உண்மைக்கு பயந்து தான் எந்த நிகழ்ச்சியிலும் நடிகர் அஜித் பங்கேற்க மாட்டேன் என்கிறார்.

அப்படி வெளியே வந்தால் என்னை போன்ற நபர்களை எல்லாம் சந்தித்து கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்று பயந்து வாழ்கிறார். நடிகர் அஜித்தை நம்பி படம் எடுத்தவர்கள் எல்லாம் நடுரோட்டில் இருக்கிறார்கள். தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ், எஸ் எஸ் சக்கரவர்த்தி இறந்தே போய்விட்டார்.

ஏ எம் ரத்தினம் நடுத்தெருவுக்கு வந்ததற்கு நடிகர் அஜித் தான் காரணம். எனக்கு இந்த உண்மையை பேச பயமில்லை. இதனால் தான் யாருக்கும் பயமின்றி பேசுகிறேன் என்று தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கூறியுள்ளார்.

Most Popular