Saturday, May 18, 2024
- Advertisement -
HomeUncategorizedமாவீரன் படத்தின் முதல் நாள் வசூல் என்ன? நடப்பாண்டின் டாப்-5 படங்கள்

மாவீரன் படத்தின் முதல் நாள் வசூல் என்ன? நடப்பாண்டின் டாப்-5 படங்கள்

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் நேற்று வெளியிடப்பட்டது. திரைப்படம் ஆரம்பத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ஆகும்.

- Advertisement -

இந்த நிலையில் திரைப்படம் வெளியிடப்பட்ட முதல் 7 .1ஒரு கோடி ரூபாய் வசூல் ஆகி இருக்கிறது. இந்த ஆண்டு பல எதிர்பார்ப்புகளுடன் வெளியிடப்பட்ட திரைப்படங்களில் மாவீரன் திரைப்படத்திற்கு முதல் நாள் வந்த வசூல் சற்று குறைவாக தான் இருக்கிறது.

கடந்த பொங்கல் என்று வெளியிடப்பட்ட தல நடித்த துணிவு திரைப்படம் வெளியிடப்பட்ட முதல் நாளை உன் 21 புள்ளி 4 கோடி ரூபாய் வசூல் ஆனது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

அதே நேரத்தில் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் வெளியிடப்பட்டது. வாரிசு திரைப்படத்தை விட அதிக தியேட்டர்களில் துணிவு திரைப்படம் வெளியிடப்பட்டது கூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.மேலும் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் முதல் நாள் 20 புள்ளி 38 கோடி ரூபாய் வசூலை பெற்றிருக்கிறது.

- Advertisement -

அதற்குப் பிறகு மணிரத்தினத்தின் நீண்ட நாள் கனவாக இருந்து 2022 ஆம் ஆண்டு நிஜமாக்கப்பட்டது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் முதல் பாகத்தின் முடிவில் பல கேள்விகளுடன் முடிக்கப்பட்டதால் பல எதிர்பார்ப்புகளுடன் இரண்டாவது பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி இந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் வெளியிடப்பட்ட முதல் நாள் 16.5 கோடி வசூலை பெற்று இருக்கிறது.

கடைசியில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் வெளியிடப்பட்டு முதல் நாள் 8 புள்ளி 8 கோடி ரூபாய் வசூலை பெற்று இருக்கிறது.

இதற்குப் பிறகு தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கும் மாவீரன் திரைப்படம் முதல் நாள் வசூலில் இந்த எந்த திரைப்படத்தையும் வெல்லவில்லை. வரக்கூடிய நாட்களில் மாவீரன் திரைப்படத்திற்கு எந்த மாதிரியான வரவேற்புகள் எடுக்கப் போகிறது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

Most Popular