சமூக வலைத்தளம் முழுக்க தற்போது விக்ரம் திரைப்பட வெற்றி விழாவில் பரிமாறப்பட்ட உணவு பற்றிய பேச்சுதான். பொதுவாக கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் நடிகர்ள் மட்டுமின்றி கலைஞர்கள் அனைவருக்கும் படப்பிடிப்பு முதல் நாள் தொடங்கி இறுதி நாள் வரை உபசரிப்பு விஷயத்தில் எந்தவித குறையும் வைக்காது. இதை அந்த நிறுவனம் தயாரித்த படங்களில் பணிபுரிந்த கலைஞர்கள் நம்மிடம் கூறியதை நாம் அனைவரும் கேட்டிருப்போம்.
அந்த விஷயம் தற்போது மீண்டும் உறுதியாகியுள்ளது. ஜூன் 3 வெளியான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் தற்போது வரை உலக அளவில் 350 கோடியை நெருங்கி வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில நாட்களில் அதிக வசூல் செய்த படமாக இது புதிய சாதனை படைக்க தயாராக உள்ளது. மாபெரும் வெற்றிபெற்ற இத்திரைப்படத்திற்கு கமல்ஹாசன் தலைமையில் நேற்று வெற்றி விழா கோலாகலமாக நடந்து முடிந்தது.
வெற்றி விழாவில் வயிறு முட்டும் அளவுக்கு உபசரிக்க பட்ட உணவு லிஸ்ட்
வெற்றி வெற்றி விழாவில் சைவம் மற்றும் அசைவ என மொத்தமாக 40 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. 40 வகையான உணவுகள் படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள்,திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும் பரிமாறப்பட்டன. 40 வகையான உணவுகள் என்ன என்ன என்ற கேள்வி உங்களுக்கு எழலாம் அதைப் பற்றித்தான் நாம் பார்க்கப் போகிறோம்.
படிப்பதற்கே நமக்கு 1-2 நிமிடங்கள் தேவைப்படும் என்ற நிலையில் இருக்கிறது உணவு லிஸ்ட். அத்தனை உணவுகளையும் கூட்டி கழித்து பார்த்தால் கூட ஒரு நபர் சாப்பிடும் 40 வகையும் சேர்த்து ஒரு இலை சாப்பட்டிற்க்கு 2000 ரூபாய்க்கு மேல் வந்தாலும் வரலாம்.