சினிமா

அடேங்கப்பா இத்தனை ஐட்டங்களா – விக்ரம் திரைப்பட வெற்றி விழாவில் தலை சுற்றும் அளவுக்கு பரிமாறப்பட்ட உணவு லிஸ்ட்

சமூக வலைத்தளம் முழுக்க தற்போது விக்ரம் திரைப்பட வெற்றி விழாவில் பரிமாறப்பட்ட உணவு பற்றிய பேச்சுதான். பொதுவாக கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் நடிகர்ள் மட்டுமின்றி கலைஞர்கள் அனைவருக்கும் படப்பிடிப்பு முதல் நாள் தொடங்கி இறுதி நாள் வரை உபசரிப்பு விஷயத்தில் எந்தவித குறையும் வைக்காது. இதை அந்த நிறுவனம் தயாரித்த படங்களில் பணிபுரிந்த கலைஞர்கள் நம்மிடம் கூறியதை நாம் அனைவரும் கேட்டிருப்போம்.

அந்த விஷயம் தற்போது மீண்டும் உறுதியாகியுள்ளது. ஜூன் 3 வெளியான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் தற்போது வரை உலக அளவில் 350 கோடியை நெருங்கி வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில நாட்களில் அதிக வசூல் செய்த படமாக இது புதிய சாதனை படைக்க தயாராக உள்ளது. மாபெரும் வெற்றிபெற்ற இத்திரைப்படத்திற்கு கமல்ஹாசன் தலைமையில் நேற்று வெற்றி விழா கோலாகலமாக நடந்து முடிந்தது.

வெற்றி விழாவில் வயிறு முட்டும் அளவுக்கு உபசரிக்க பட்ட உணவு லிஸ்ட்

வெற்றி வெற்றி விழாவில் சைவம் மற்றும் அசைவ என மொத்தமாக 40 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. 40 வகையான உணவுகள் படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள்,திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும் பரிமாறப்பட்டன. 40 வகையான உணவுகள் என்ன என்ன என்ற கேள்வி உங்களுக்கு எழலாம் அதைப் பற்றித்தான் நாம் பார்க்கப் போகிறோம்.

விருந்தின் மெனுவில் நாட்டுக்கோழி சூப், முருங்கை கீரை சூப், மாம்பழ ரோல், லிச்சி பழ சந்தேஷ், மட்டன் கீமா உருண்டை, சிக்கன் பிச்சுப்போட்ட வறுவல், வஞ்சரம் மீன் வறுவல், இறால் தொக்கு, மட்டன் சுக்கா, சோள சீஸ் உருண்டை, பன்னீர் டிக்கா, மெக்சிகன் டாகோஸ், ஜலபேனோ சீஸ் சமோசா, கொங்கு ஸ்பெஷல் மட்டன் பிரியாணி, கொங்கு ஸ்பெஷல் சைவ பிரியாணி, தால்சா, ரைதா, விருதுநகர் பன் பரோட்டா, சிக்கன் பள்ளிபாளையம் கிரேவி, சைவ பள்ளிபாளையம் கிரேவி, இடியாப்பம், ஆட்டுக்கால் பாயா, சைவ குருமா, மதுரை மட்டன் கறி தோசை, முட்டை தோசை, மைசூர் மசால் தோசை, பொடி தோசை, வெங்காய தோசை, கொய்யாக்காய் சட்னி, கோவைக்காய் சட்னி, நிலக்கடலை சட்னி, தேங்காய் சட்னி,சாம்பார், சாமை அரிசி தயிர் சாதம், மோர் மிளகாய், மாங்காய் ஊறுகாய், சுக்கு பால், பெரேரா ரோச்செர் ஐஸ்கிரீம் மற்றும் ஸ்பெஷல் மஹாய் பீடா.

படிப்பதற்கே நமக்கு 1-2 நிமிடங்கள் தேவைப்படும் என்ற நிலையில் இருக்கிறது உணவு லிஸ்ட். அத்தனை உணவுகளையும் கூட்டி கழித்து பார்த்தால் கூட ஒரு நபர் சாப்பிடும் 40 வகையும் சேர்த்து ஒரு இலை சாப்பட்டிற்க்கு 2000 ரூபாய்க்கு மேல் வந்தாலும் வரலாம்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

TOP STORIES

To Top