விஷால் திரைப்பட வாழ்க்கையில் தற்போது மிக முக்கிய திரைப்படமாக மார்க் ஆண்டனி அமைந்திருக்கிறது. தொடர்ந்து ஏழு படங்கள் விஷாலுக்கு தோல்வியாக அமைந்த நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது.
மேலும் 100 கோடி ரூபாய் வசூலை மார்க் ஆண்டனி பெறும் என்ற எதிர்பார்ப்பு திரைத்துறை வட்டாரங்கள் இடையே ஏற்பட்டிருக்கிறது. இந்த படத்தின் வெற்றிக்கு படத்தின் டிரைலரும் ஒரு முக்கிய காரணம் அதுவும் இல்லாமல் படத்தில் மறைந்த பிரபல நடிகை சில்க் ஸ்மிதாவை திரையில் பட குழு கிராபிக்ஸ் காட்சி மூலம் கொண்டு வந்திருக்கிறது.
இது குறித்து பேசிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சில்க் ஸ்மிதாவை திறையில் கொண்டு வர தாம் மிகவும் கஷ்டப்பட்டதாக கூறினார். சில்க்ஸ் மாதிரி ஒரு பெண்ணை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம்.
ஆனால் மேக்கப் எல்லாம் போட்ட பிறகும் அவர் சிலுக்கு போல் தெரியவில்லை. இதற்காக கிராபிக்ஸ் காட்சிகளை பயன்படுத்தினோம். இதில் பலரும் சில்க்கை கிராபிக்ஸில் கொண்டுவர முடியாது என்று கூறி பின்வாங்கி விட்டார்கள்.
ஆனால் சென்னையில் உள்ள ஒரு நிறுவனம் மட்டும் நாங்கள் முயற்சி செய்கிறோம். ஆனால் சில்க் மாதிரி வருமா என்று எங்களுக்கு முழுமையாக தெரியாது என்று கூறி விட்டார்கள். இருந்தாலும் பரவாயில்லை என பணியை மேற்கொண்டு கடைசி நீண்ட முயற்சி பிறகுதான் சில்க்கை எங்களால் திரையில் கொண்டு வர முடிந்தது.
பலரும் சில்க்கை வைத்து ஒரு பாடலை செய்யுங்களேன் என்று கூறினார்கள். புஷ்பா படத்தில் வந்த பாடல் போல் சிலுக்கை வைத்து ஒரு பாடலை தயார் செய்வது சரி கிடையாது என்று நான் அப்போது முடிவெடுத்தேன்.
இறந்து போன ஒரு நடிகையை அப்படி பயன்படுத்த என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. அந்தப் படத்தில் உள்ள காட்சியில் ஷில்க்கும் ஒரு பெண் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனையை ஒரு டானிடம் போய் தீர்வு கேட்கிறார் என்பதை தான் அமைத்தேன்.அந்த இடத்தில் ஒரு பாடலை வைக்க என் மனம் வரவில்லை. நானே திருந்தி வந்து இருக்கிறேன். இப்போது எதற்கு ஐட்டம் சாங் என கேட்டு பாடலை எடுக்க வேண்டாம் என முடிவு எடுத்து விட்டேன்.