Wednesday, May 15, 2024
- Advertisement -
Homeசினிமாஅரசியல் எனக்கு வேண்டாம்.. ரசிகர்கள் தான் முக்கியம்.. நடிகர் அஜித் பேச்சு

அரசியல் எனக்கு வேண்டாம்.. ரசிகர்கள் தான் முக்கியம்.. நடிகர் அஜித் பேச்சு

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹீரோவாக நடித்தால் அரசியலில் இடம் பிடித்து விடலாம் என்ற ஃபார்முலா பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து இருக்கிறது.அது கலைஞர்,எம்ஜி ஆர், விஜயகாந்த், ரஜினி கமல் என தற்போது விஜய் வரை நீண்டு இருக்கிறது.

- Advertisement -

சினிமாவில் தங்களுக்கென்று ஒரு பட்டாளத்தை உருவாக்கி அதை பயன்படுத்தி அரசியலில் சாதிக்க நினைக்கும் நடிகர்களுக்கு மத்தியில் எனக்கு அரசியல் வேண்டாம். ரசிகர்கள் தான் முக்கியம் என்று நடிகர் அஜித் பேசி இருக்கிறார்.

சிலர் சொல்வார்கள் ஆனால் அதை அடுத்த நிமிடமே மாற்றி விடுவார்கள். ஆனால் அஜித் இப்படி சொன்னது தற்போது அல்ல 2005 ஆம் ஆண்டு ஒரு நாளிதழுக்கு நடிகர் அஜித் பேட்டி அளித்திருக்கிறார். அதுதான் தற்போது வைரலாகி இருக்கிறது.

- Advertisement -

இதில் அஜித் பேசிய பேச்சு சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பானதாகும். ஆனால் தனது பேச்சிலிருந்து இன்றும் மாறாமல் அஜித் இருக்கிறார்.அவர் என்ன பேசினார் என்று தற்போது பார்க்கலாம்.

- Advertisement -

என்னுடைய ரசிகர்கள் அதிக அளவில் மரம் வளர்க்க வேண்டும். மரம் வளர்ப்பது மூலம் நமது பூமியை பசுமையாக ஆக்க முடியும். சுத்தமான காற்றை நாம் சுவாசிக்க முடியும். எனவே என்னுடைய ரசிகர்கள் தெருவுக்கு ஒரு மரமாவது வளருங்கள் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கு அரசியலில் வரும் விருப்பமில்லை.நான் பலமுறை இதை தெளிவாக கூறி விட்டேன். எனக்கு அரசியல் முக்கியமில்லை. என்னுடைய ரசிகர்கள் தான் முக்கியம். என்னுடைய ரசிகர்கள் பலர் கட்சியில் இருக்கிறார்கள்.

பல கட்சிகளை சேர்ந்தவர்கள் என்னை ரசிக்கிறார்கள். இப்படி இருக்க நான் இந்த கட்சியை சேர்ந்தவன் என்று முத்திரை குத்தினால் அது என்னை ரசிப்பவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும்.

நான் எப்போதும் போல அனைவருக்கும் வேண்டியவனாக உங்கள் அஜித் ஆகவே இருக்க விரும்புகிறேன். என்னுடைய தொழில் நடிப்புதான் அதில் தான் நான் என்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த பேட்டியில் தான் பாலா இயக்கத்தில் ஒரு படமும் கேஸ் ரவிக்குமார் இயக்கத்தில் காட்பாதர் என்ற படமும் நடிக்க இருப்பதாக கூறியிருந்தால் அதில் பாலா படம் கைவிடப்பட்டது காட்பாதர் திரைப்படம் வரலாற்று வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது

Most Popular