Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமா“ அசிங்கமா இல்லையா.. கேப்டன் மில்லர் என்னுடைய கதை.. ” நாக்கு பிடுங்கும் அளவுக்கு குற்றம்...

“ அசிங்கமா இல்லையா.. கேப்டன் மில்லர் என்னுடைய கதை.. ” நாக்கு பிடுங்கும் அளவுக்கு குற்றம் சாட்டியுள்ள வேல ராமமூர்த்தி

நடிகர் தனுஷ் – அருண் மாதீஸ்வரன் காம்போவில் உருவான கேப்டன் மில்லர் திரைப்படம் அண்மையில் பொங்கலுக்கு உலகெங்கும் வெளியானது. ஆங்கிலேயர்கள் – இந்திய ஆண்டைகள் – ஓடுக்கப்பட்டவர்கள் மூவருக்கும் இடையே நடக்கும் மோதல் தான் படம்.

- Advertisement -

இப்படத்தில் தனுஷுடன் ஷிவராஜ்குமார், பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஜி.வி.பிரகாஷின் இசை மற்றும் அதிரடியான சண்டைக் காட்சிகள் படத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

இருப்பினும் படம் சற்று கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் அது வசூலை பெரிதாக எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. இதுவரை 70+ கோடிக்கும் மேல் உலகெங்கும் வசூலிதுள்ளது. இந்த வேளையில் படக்குழுவுக்கு ஒரு சிக்கல் முன்வந்துள்ளது.

- Advertisement -

முன்னணி நடிகர் மற்றும் எழுத்தாளருமான வேல ரமூர்த்தி நேற்று, கேப்டன் மில்லர் படத்தின் கதை தன்னுடைய ‘ பட்டத்துயானை ’ நாவலில் இருந்து திருடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து நாக்கு பிடுங்கும் அளவுக்கு செய்தியாளரிடம் பேசியுள்ளார்.

- Advertisement -

அவர் கூறியதாவது, “ கேப்டன் மில்லர் படத்தின் கதை என்னுடைய பட்டத்துயானை நாவலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டேன். இப்படியெல்லாம் செய்ய அசிங்கமாக இல்லையா ? அந்த நாவலை எழுதிய நான் இன்னும் உயிருடன் தானே இருக்கிறேன், என்னிடம் ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம். ”

மேலும், “ கேப்டன் மில்லர் மட்டுமல்ல பல படங்களில் நான் எழுதிய நாவல்களில் இருந்து காட்சிகள் எடுக்கப்படுகின்றன. ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் கூட அப்படி காட்சிகள் இருந்ததாக கூறினார்கள். என்னதான் புகார் தந்தாலும் வலுத்தவன் பக்கம்தான் நியாயம் பேசுவார்கள். திரையுலகில் இப்படி அடிக்கடி நடப்பது எனக்கு அசிங்கமாகவும் வேதனையாகவும் உள்ளது. ” என வருத்தம் தெரிவித்தார்.

இந்த நாவலைப் பதித்த டிஸ்கவரி நிறுவனம் சார்பாக வேடியப்பன் தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் இது குறித்துப் பேசியுள்ளார். “ ஒரு படைப்பாளனின் படைப்பை திருடுவதுபோல ஒரு முட்டாள்தனமானது என்னவாக இருக்க முடியும் ? படைப்பாளர்கள் குரல் கொடுக்க வேண்டும் ” என்றுள்ளார்.

Most Popular