Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentநகைச்சுவை நடிகரின் மகனை திருமணம் செய்கிறாரா அர்ஜூன் மகள்… கோலிவுட்டில் கோலாகலமாக நடைபெற இருக்கும் திருமணம்

நகைச்சுவை நடிகரின் மகனை திருமணம் செய்கிறாரா அர்ஜூன் மகள்… கோலிவுட்டில் கோலாகலமாக நடைபெற இருக்கும் திருமணம்

நடிகரின் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா, நடிகர் தம்பிராமையாவின் மகனை
காதலிப்பதாகவும், இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் அர்ஜூன்

கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் அர்ஜூன், 1984ம் ஆண்டு
வெளியான ராமநாராயணனின் நன்றி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில்
அறிமுகமானார். தொடர்ந்து கன்னடம், தெலுங்கு என பல்வேறு படங்களில்
நடித்து வந்த அவருக்கு ஜென்டில் மேன் திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. ஷங்கர் இயக்கத்தில் 1993ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் விமர்சனரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல், வசூலிலும் சக்கை போடு போட்டது. இந்த படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதையும் அர்ஜூன் பெற்றார்.

ஆக்சன் கிங்காக அவதரித்த அர்ஜூன்

தொடர்ந்து ஜெய்ஹிந்த், கர்ணா, செங்கோட்டை என தொட்டதெல்லாம் வெற்றிப்படங்களாக அமைக்க, அர்ஜூனுக்கு ஆக்சன் கிங் பட்டம் தேடி வந்தது. ரசிகர்களின் ஏகோபித்த நடிகர்களின் ஒருவரான அர்ஜூன், தனக்கு உரித்தான கதைகளை கவனமாக தேர்வு செய்து அதனை வெற்றி திரைப்படமாக மாற்றும் வித்தையை கற்றுக்கொண்டார். அவர் வாழ்வில் மணிமகுடம் சூட்டுவது போல அமைந்த திரைப்படம்தான் முதல்வன். இயக்குநர் ஷங்கருடன் இரண்டாவது கைகோர்த்த அர்ஜூன், முதல்வன் திரைப்படத்தில் நின்று ஆடினார். 1999ம் ஆண்டு வெளியான முதல்வன் திரைப்படம் வசூலை வாரிக்குவித்தது.

- Advertisement -

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆக, ரகுவரன் வில்லத்தனமாக நடிப்பும், ஷங்கரின் நேர்த்தியான திரைக்கதையும் முதல்வன் திரைப்படத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றது. இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய நடிகராக உருவெடுத்தார் அர்ஜூன். 2000ம் ஆண்டில் அர்ஜூன் – வசந்த் கூட்டணியில் வெளியான ரிதம் திரைப்படமும், ரசிகர்களின் மனதுக்கு இதமாக அமைந்தது.

- Advertisement -

வில்லன் அவதாரம் எடுத்த நடிகர்

தொடர்ந்து ஆக்சன் படங்களில் கவனம் செலுத்திய அர்ஜூன், ஏழுமலை,
பரசுராம், ஒற்றன், அரசாட்சி, மருதமலை, வாத்தியார், திருவண்ணாமலை, துரை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். மங்காத்தாவில் அஜித்துடன் ஆக்சன் கிங் அர்ஜூன் நடித்த காட்சிகளை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திட முடியாது. அதன்பிறகு வில்லன் கதாபாத்திரம் தனக்கு எடுபடுவதை உணர்ந்த அர்ஜூன், இரும்பு திரை படத்தில் விஷாலுக்கு எதிரியாக நடித்து மிரட்டினார். தற்போது லியோ திரைப்படத்திலும் வில்லன் கேரக்டரிலேயே அவர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அர்ஜூன் மகளுக்கு விரைவில் டும் டும் டும்

அர்ஜூனின் மூத்த மகளான ஐஸ்வர்யா, விஷால் நடிப்பில் உருவான பட்டத்துயானை திரைப்படம் மூலம் தமிழ்சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதையடுத்து அவருக்கு திரைப்படங்களுக்கான வாய்ப்பும் பெரிதாக கிடைக்கவில்லை. இந்நிலையில், நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதியும், அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவும் காதலிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், இதனால் விரைவில் இவர்களது திருமணம் நடைபெற இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Most Popular