Saturday, September 14, 2024
- Advertisement -
HomeEntertainmentமீண்டும் இணையும் தளபதி கூட்டணி.. ரஜினிகாந்த் ஜோடியாக யார் தெரியுமா? லோகேஷ் கனகராஜ் சம்பவம் போல

மீண்டும் இணையும் தளபதி கூட்டணி.. ரஜினிகாந்த் ஜோடியாக யார் தெரியுமா? லோகேஷ் கனகராஜ் சம்பவம் போல

ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக லால் சலாம் படத்தில் நடித்தார். இந்த படம் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்த நிலையில், அடுத்ததாக மீண்டும் அதே தயாரிப்பாளருக்கான வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்த் மட்டுமல்லாமல் ஃபகத் ஃபாசில், ராணா, அமிதாப் பச்சன், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியான நிலையில், கடந்த வாரம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது. அந்த போஸ்டரிலேயே டைட்டில் டீசர் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதன்பின் ரஜினிகாந்த் உடனான டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனிமல் படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா, தலைவர் 171 படத்தின் டீசரை நேற்று தான் பார்த்தேன். லோகேஷ் கனகராஜ் ஸ்டைலில் ரஜினிகாந்தை பார்த்தது மிகவும் பிடித்தது. படத்தை பார்க்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். 

- Advertisement -

இதன் மூலமாக தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் படப்பிடிப்பு முடிவடைந்தது தெரிய வந்தது. தேர்தல் முடிவடைந்த பின் இதனை வெளியிடுவது மட்டுமே சன் பிக்சர்ஸ் நிர்வாகத்தின் பணியாக உள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க நடிகை ஷோபனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

- Advertisement -

இவர்கள் இருவரும் கடைசியாக தளபதி படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதன்பின் இருவரும் இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் கனகராஜ் தளபதி படத்தின் தீவிர ரசிகன் என்று ஏர்கனவ்ஃபே கூறியுள்ளதால், அதே ஜோடியை மீண்டும் இணைத்துள்ளார். 

Most Popular