Saturday, December 7, 2024
- Advertisement -
HomeEntertainmentநாங்க அப்போவே நண்பர்கள் தான்.. அஜித் மகள் பிறந்தநாள் விழா.. தளபதி விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்

நாங்க அப்போவே நண்பர்கள் தான்.. அஜித் மகள் பிறந்தநாள் விழா.. தளபதி விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாதம் படக்குழு சென்னை திரும்பிய நிலையில், அஜித் குமார் நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் உருவாகுவதாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவடைந்த பின் மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித் குமார் கலந்துகொள்ள உள்ளார். இதேபோல் நடிகர் விஜய், வெங்கட்பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார்.

இரு நடிகர்களின் தரப்பிலும் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. அதேபோல் முன்பை போல் அல்லாமல் அஜித் குமார் – விஜய் ரசிகர்கள் தரப்பு சோசியல் மீடியாவில் கூட மோதிக் கொள்வதில்லை. பெரிதாக கிண்டல் கூட செய்யாமல் இரு தரப்பும் ரசிகர்களும் தங்களது நட்சத்திரங்களை கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் இரு தரப்பு ரசிகர்களையும் உற்சாகப்படுத்தும் நோக்கில் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. நடிகர் அஜித் குமார் மூத்த மகளான அனோஷ்காவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்ட வீடியோவை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். அந்த வீடியோவில் அஜித் மகளுடன் நடிகர் விஜய் ஜாலியாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

அஜித் குமார் மகளுக்கு தற்போது 17 வயதாகும் நிலையில், அனோஷ்காவின் சிறுவயது பிறந்தநாள் நிகழ்ச்சி வீடியோ இப்போது ட்ரெண்டாகி வருகிறது. இதன் மூலம் சினிமாவை கடந்து இருவரும் சில காலங்களுக்கு முன்பாகவே நல்ல நட்புடன் இருந்து வந்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Most Popular