Saturday, December 7, 2024
- Advertisement -
HomeEntertainmentபோஸ்டரில் இதனை கவனிச்சீங்களா.. அண்ணன் ரெடி.. யுவன் இசையில் முதல்முறையாக பாடிய தளபதி விஜய்

போஸ்டரில் இதனை கவனிச்சீங்களா.. அண்ணன் ரெடி.. யுவன் இசையில் முதல்முறையாக பாடிய தளபதி விஜய்

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் GOAT. நடிகர் விஜய் உடன் நடிகர்கள் பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா, பிரேம்ஜி, பைவவ், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

- Advertisement -

நடிகர் விஜய் வெவ்வேறு தோற்றங்களில் நடித்து வருவதால், படம் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டைம் டிராவலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில், வில்லனாகவும் விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரம்ஜானை முன்னிட்டு GOAT படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப். 5ல் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. GOAT படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். 

- Advertisement -

தற்போது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு GOAT படத்தின் முதல் பாடலை வெளியிட உள்ளதாக ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய கீதை படத்திற்கு பின் நடிகர் விஜய் உடன் முதல்முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ளார். இதனால் படத்தின் பாடல்கள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

தற்போது யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் பாடியுள்ள பாடலை முதல் சிங்கிளாக வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. நாளை மாலை 6 மணிக்கு இந்த படம் வெளியாகும் என்றும், ஏற்கனவே யுவன் சங்கர் ராஜா கூறியதை போல் தர லோக்கல் குத்துப் பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போஸ்டரில் விசில் இருப்பதால், அதன் மூலம் யுவன் முயற்சித்திருப்பார் என்று பார்க்கப்படுகிறது.

Most Popular