Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentதளபதி விஜய் கூட இவ்வளவு வாங்கலேயே.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் சம்பளம் ரூ.130 கோடியா?...

தளபதி விஜய் கூட இவ்வளவு வாங்கலேயே.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் சம்பளம் ரூ.130 கோடியா? மிரண்டுபோன தமிழ் சினிமா!

இந்தியாவில் இந்தி தொடங்கி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பலரும் சினிமாவில் ஹீரோ, ஹீரோயின்களாக நடித்து வருகிறார்கள். இந்தியில் 2006ஆம் ஆண்டு முதல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில், அதன் தொகுப்பாளாராக சல்மான் கான் செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன்

அதேபோல் தமிழில் நடிகர் கமல்ஹாசன் 2017ம் ஆண்டு முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஆறு சீசன்களாக வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக் பாஸ் விளங்கி வந்துள்ளது. மேலும் இடையே டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான பிக் பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியை கமல் ஹாசன், சிம்பு இருவருமே தொகுத்து வழங்கினர்.

இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த சுவாரஸ்ய அப்டேட்கள் தற்போது வெளியாகி வருகின்றன. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் சில வாரங்களில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளதை அவரே உறுதி செய்துள்ளார். இதற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு ரூ.130 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

- Advertisement -

ரூ.130 கோடி சம்பளமா?

இந்த தகவல் தமிழ் சினிமா நடிகர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஏனென்றால் நடிகர் விஜய் கூட ஒரு படத்துக்கு இன்னும் ரூ.100 கோடியை தாண்டவில்லை. ஆனால் 15 வாரங்களில் வெறும் 30 நாட்கள் தொகுத்து வழங்குவதற்கு ரூ.130 கோடியா என்று ரசிகர்களும் வியப்பில் உள்ளனர். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதாலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியை காணும் ரசிகர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

- Advertisement -

இதுதான் காரணமா?

இதனால் கமல்ஹாசனுக்கு வழங்கப்படும் சம்பளம் சரியானதே என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் தமிழ் சினிமாவை காட்டிலும் தொலைக்காட்சியிலும் அதிக பணப்பழக்கம் இருப்பது ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது. தற்போது சம்பள விவகாரம் வெளியாகியுள்ள நிலையில், பெரும் தொகை கொடுப்பதாலேயே நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறாமல் இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதேபோல் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2, மணிரத்னம் உடனான படம், அ.வினோத் உடனான படம், பிராஜக்ட் கே உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. இதுமட்டுமல்லாமல் பா.இரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்ட இயக்குநர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். ஒரு பக்கம் தயாரிப்பு, இன்னொரு பக்கம் தொலைக்காட்சி நிகழ்ச்சி, இன்னொரு பக்கம் நடிப்பு என்று சகலகலா வல்லவனாக கமல்ஹாசன் செயல்பட்டு வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular