Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமாநேரில் சந்தித்து ஜான் சீனவையே களாய்த்த நடிகர் கார்த்தி.. குசும்பு தான்.. !

நேரில் சந்தித்து ஜான் சீனவையே களாய்த்த நடிகர் கார்த்தி.. குசும்பு தான்.. !

ஒரு 10 – 15 ஆண்டுகளுக்கு முன் WWE மல்யுத்தம் அளவில்லாத பிரபலத்தை பெற்றிருந்தது. இந்த ஆண்டு ஹைதராபாத்தில் மல்யுத்த வீரர்கள் வருகை தருகின்றனர். மல்யுத்த சூப்பர்ஸ்டார்கள் என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர்களில் ஜான் சீனா நிச்சயம் இடம் பெற்றிருப்பார்.

- Advertisement -

WWE சூப்பர்ஸ்டார் ஸ்பெக்டகில் எனும் இந்த நிகழ்ச்சியில் ஜான் சீனா பங்கேற்கிறார். இவர் மல்யுத்தம் தவிர படங்களிலும் நடித்துள்ளார். பலரது ஃபேவரைட்டான இவரைச் சந்திக்க நடிகர் கார்த்தி நேரில் சென்றுள்ளார்.

ஜான் சீனாவைச் சந்தித்து பேசிய கார்த்தி தன் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாவது, “ ஜான் சீனாவைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. அன்பாக இருந்ததற்கு நன்றி. கிடைத்த கொஞ்ச நேரத்திலேயே அனையாவரியும் ஸ்பெஷலாக உணர வைக்கிறார். ”

- Advertisement -

மேலும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை போட்டு, “ இப்போது என்னால் உங்களைப் பார்க்க முடிகிறது. ” எனக் கலாய்த்து இருக்கிறார். WWE போட்டிகளில், “ உங்களால் என்னைப் பார்க்க முடியாது ” என்பது ஜான் சீனாவின் வசனம். இது மிகவும் பிரபலமான ஒன்று.

- Advertisement -

சமூக வலைதளங்களில் ஜான் சீனாவுடன் யாரேனும் புகைப்படம் எடுத்துக் கொண்டால், “ யாருடன் இருக்கிறீர்கள் என்னால் பார்க்க முடியவில்லையே ” எனக் கலாய்ப்பார்கள் நெட்டிசன்கள். அந்த வகையில் நடிகர் கார்த்தி ஜான் சீனாவின் வசனத்திற்கு மாறாக, “ இப்போது என் கண்களுக்கு நீங்கள் தெரிகிறார்கள். ” என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

செப்டம்பர் 8ஆம் தேதி ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது முடிந்தது இந்த நிகழ்ச்சி. WWE மல்யுத்த போட்டிகளின் ரசிகர்கள் பல ஆயிரங்கள் செலவிட்டு இதனைப் பார்த்து ரசித்தனர்.

Most Popular