Friday, May 17, 2024
- Advertisement -
Homeசினிமாதென்னிந்திய படங்களை புறக்கணியுங்கள்..! வட இந்தியாவில் கிளம்பும் பிரச்சாரம்? யாரு டா இவன்!

தென்னிந்திய படங்களை புறக்கணியுங்கள்..! வட இந்தியாவில் கிளம்பும் பிரச்சாரம்? யாரு டா இவன்!

தென்னிந்திய படங்களுக்கு எதிராக வட இந்தியாவில் விமர்சனமான கே ஆர் கே பிரச்சாரம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். பாலிவுட்டில் கமல் கான் என்று நடிகர் ஒருவர் தேஸ் துரோகி, தேஸ் துரோகி 2 ,ஏக் வில்லன் ஆகிய படங்களை எடுத்திருக்கிறார்.

- Advertisement -

இவர் எப்போதுமே சமூக வலைத்தளத்தில் பரபரப்பு கருத்துக்களை வெளியிடுவதில் பிரபலம். எந்த அளவிற்கு என்றால் யாருமே சொல்ல தயங்காத விஷயங்களை கூட பளிச்சென சொல்லிவிடுவார். இந்த நிலையில் கமல் கான் தற்போது தென்னிந்திய சினிமாவுக்கு எதிராக பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார்.

அதில் அவர் சொல்வது ஒன்றே ஒன்றுதான். தெலுங்கு கன்னடம் தமிழ் படங்களை பாலிவுடில் நாங்கள் பார்க்கிறோம். கே ஜி எஃப்,பாகுபலி போன்ற படங்களை நாங்கள் வெற்றிப்படமாக மாற்றுகிறோம். ஆனால் எங்களுடைய பாலிவுட் படங்கள் ரிலீஸ் ஆகும்போது எல்லாம் தென்னிந்தியாவில் அதனை யாருமே பார்க்க மாட்டீர்கள்.

- Advertisement -

தற்போது வெளியான ஜவான் திரைப்படத்தைக் கூட வட இந்தியாவில் பார்ப்பதால் தான் வசூல் அதிகமாகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கன்னடா, மலையாளம் ஆகிய எந்த மொழிகளிலும் வட இந்திய சினிமாவை பார்ப்பதில்லை.

- Advertisement -

இங்கு மட்டுமல்ல வெளிநாட்டுகளில் கூட வட இந்திய சினிமாவை தென்னிந்தியர்கள் பார்ப்பதில்லை. நிலைமை இப்படி இருக்க நான் மட்டும் ஏன் தென்னிந்திய சினிமாவை கொண்டாட வேண்டும். இனி தென்னிந்திய படங்களை நான் பார்க்கவே மாட்டேன். அதைப்பற்றி பேசவே மாட்டேன்.

தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு நாம் தக்க பாடத்தை புகட்ட வேண்டும். அதற்காக இனி நாம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய படங்களை பார்க்கவே கூடாது என்று அவர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்.

அட்லீ ஒரு தமிழ் இயக்குனர் என்றாலும் தமிழ்நாட்டில் இருந்து ஜவான் படத்தை அதிக அளவில் மக்கள் பார்க்கவில்லை என்பது பாலிவுட் மீதான வெறுப்புணர்வை தான் காட்டுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதைக் கேட்டதும் இங்கு உள்ள ரசிகர்கள் யாருடா நீ கோமாளி படம் நல்லா இருந்தா நாங்க ஏன்டா பார்க்காம இருக்க போகிறோம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Most Popular