Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாமனோபாலா மரணத்திற்கு காரணம் இது தான் - மன்சூர் அலி கான் சர்ச்சை பேச்சு

மனோபாலா மரணத்திற்கு காரணம் இது தான் – மன்சூர் அலி கான் சர்ச்சை பேச்சு

பிரபல நடிகரும் இயக்குனருமான மனோபாலா கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் காலமானார். இது தமிழக ரசிகர்கள் மனதில் பெரும் துயரத்தை ஆழ்த்தியது. இந்த நிலையில் மனோபாலா இறுதி சடங்கு நேற்று நடந்து முடிந்து விட்டது.

- Advertisement -

மனோபாலாவுக்கு ஏற்கனவே இதய பிரச்சினை இருந்த நிலையில், தற்போது கல்லீரலும் பாதிக்கப்பட்டதால் அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார். இந்த நிலையில் மனோ பாலாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

- Advertisement -

இதில் பங்கேற்று பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மனோ பாலாவை தமிழ் சினிமா இழந்து விட்டதாக கூறினார். அவர் ஏற்படுத்திய வெற்று இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்று கூறிய மன்சூர் அலிகான், மனோபாலா நல்ல சிந்தனைவாதி அனைவரையும் சிரிக்க வைப்பார் என்று கூறினார்.

- Advertisement -

தமிழ் நடிகர்கள் பலரும் மது போதையால் தங்களுடைய உயிரை இழக்கிறார்கள். மது பலருக்கு எமனாக இருப்பதாக கூறினார். இதைப் பேசி முடித்துவிட்டு வெறும் மதுவை மட்டும் குடிக்காமல் சைட் டிஷும் சேர்ந்து சாப்பிடுங்கள் என்றும் மன்சூர் அலிகான் கூறினார்.

இதை கேட்டதும் அங்கு இருந்தவர்கள் துக்கத்தில் கூட சிரித்து விட்டார்கள். பிறகு ஏதோ உலறி விட்டோம் என்பதை உணர்ந்த மன்சூர் அலிகான், அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்று கூறி துவா செய்தார். மன்சூர் அலி கானின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மது போதையால் தான் கல்லீரல் பாதிக்கப்பட்டு மனோபாலா இறந்து விட்டார் என்று தோனியில் பேசிய மன்சூர் அலிக்கான் அதுக்கு சைட் டிஷ் சேர்த்து சாப்பிடுங்கள் என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

இந்த நிலையில் மனோபாலாவின் பக்கத்து வீட்டுக்காரர்கள் பேசுகையில், கோபிசெட்டிபாளையத்தில் ஷூட்டிங்கில் இருந்த போது மனோபாலாவுக்கு அதிக அளவில் இருமல் இருந்ததாகவும், இதனால் மருத்துவமனையில் வந்து அனுமதிக்கப்பட்ட பிறகு அவருக்கு சாப்பாடு சுத்தமாக நின்று விட்டதாகவும், தண்ணீரில் கரைத்து தான் சாப்பாடு கொடுக்கும் நிலை ஏற்பட்டதாகவும் கூறினார். இதனால் அவளுடைய மகன் அமெரிக்காவில் இருந்து வந்து தன் தந்தையை பார்த்துக் கொண்டதாகவும் மதியம் பேசிக் கொண்டிருக்கும் போது உயிர் பிரிந்து விட்டதாகவும் அவர்கள் கூறினர்.

Most Popular