Saturday, May 4, 2024
- Advertisement -
HomeUncategorizedZomato வில் பணிபுரியும் நடிகர் மோகன்.. இவருக்கா இந்த நிலை

Zomato வில் பணிபுரியும் நடிகர் மோகன்.. இவருக்கா இந்த நிலை

தமிழ் சினிமாவில் வெள்ளி விழா நாயகன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் மோகன். ரஜினி , கமல் என ஒரு காலத்தில் தமிழ் சினிமா இவர்கள் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.

- Advertisement -

ஆனால் தொடர்ந்து காதல் படங்களாக நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகர் மோகன். இவர் தொடர்ந்து காதல் படங்களிலே நடித்த வந்ததால் பிற்காலத்தில் காணாமல் போனார்.

சினிமாவில் இவருக்கென இருந்த இடம் பறிபோனது. ஆக்சன் காட்சிகளில் நடித்திருந்தால் மோகனுக்கு இந்த நிலைமை வந்திருக்காது என பலரும் கூறுவது உண்டு. இந்த நிலையில் அவ்வப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்த மோகன் திடீரென்று எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் வராமல் இருந்தார்.

- Advertisement -

தற்போது மோகன் சொமேட்டோவில் பணிபுரிவது போல் ஒரு போட்டோ வெளியானது. இதனை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சினிமாவில் ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்கி வந்த மோகன் தற்போது சொமேட்டோ ஊழியராக இருக்கிறார் என்று பலரும் மனம் வருந்தினர்.

- Advertisement -

ஆனால் இது ஹரா என்ற படத்தில் மோகன் நடிக்கும் ஒரு கதாபாத்திரம் என்று தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது. அந்த படத்தில் மோகன் ஜொமேட்டோ ஊழியராக பணிபுரிவதாகவும் அப்போது அவர் ஒரு சம்பவத்தில் சிக்கி எப்படி மீன்கிறார் என்பதை பொறுத்தே இந்த படத்தின் கதை இருக்கும்.

இந்த படத்தில் நடிகை குஷ்பூ நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் தற்போது மோகனுடன் சர்ச்சைக்குரிய நடிகை வனிதா நிற்பது போன்று புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இதனால் மோகனம் வனிதாவும் இந்த படத்தில் நடித்திருக்கலாம் என தெரிகிறது.

நடிகர் மோகன் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமா உலகுக்கு வருவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இதனால் டொமேட்டோவில் மோகன் கிறாரா அவருக்காக இந்த நிலைமை என்று வரும் கமெண்ட்டை எல்லாம் நம்ப வேண்டாம் என்றும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

Most Popular