Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாதளபதி 68 - விஜய்யுடன் நடிக்க போகும் பிரசாந்த்.. மேலும் 2 சூப்பர் ஸ்டார்கள் நடிக்க...

தளபதி 68 – விஜய்யுடன் நடிக்க போகும் பிரசாந்த்.. மேலும் 2 சூப்பர் ஸ்டார்கள் நடிக்க உள்ளனர்

தமிழ் சினிமாவில் ஜெயிலர் மிகப்பெரிய சாதனை படைத்து முடித்துள்ள நிலையில் தற்போது அதனை தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் முறியடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பேன் இந்தியா திரைப்படமாக லியோ உருவாகி உள்ள நிலையில் உண்மையான திரைப்படம் தளபதி 68 தான் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்,  ஏஜிஎஸ் நிறுவனம்  தயாரிக்கிறது. இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக ஏற்கனவே வெங்கட் பிரபுவின் தந்தை கூறியுள்ள நிலையில் தற்போது அது உண்மையாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த டாப் ஸ்டார் பிரசாந்த் தளபதி 68 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது குறித்து வெங்கட் பிரபு தரப்பிலிருந்து நடிகர் பிரசாந்தை அணுகியிருப்பதாகவும் இதற்கு பிரசாந்த் ஓகே சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது. இது பிரசாந்துக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருக்கும் என தெரிகிறது. பிரசாந்திடம் வெங்கட் பிரபு கேட்டது குறித்து அவருடைய தந்தை தியாகராஜனும் உறுதி செய்திருக்கிறார்.

- Advertisement -

இது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை பேன் இந்திய அளவில் கொண்டு செல்வதற்காக வெங்கட் பிரபு ஒரு மாஸ் திட்டத்தை வைத்திருக்கிறார்.

- Advertisement -

அதன்படி பாலிவுட் நட்சத்திரங்களான அமீர்கான் மற்றும் ஷாருக்கான் இந்த படத்தின் நடிக்க வைக்க அவர் முடிவு எடுத்திருக்கிறார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

விஜய் படத்தில் கண்டிப்பாக நடிப்பேன் என்று ஷாருக்கான் ஏற்கனவே கூறிவிட்ட நிலையில் அமீர் காணும் இதில் நடித்தால் தமிழ்நாட்டில் இருந்து இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தும் என்று நம்பப்படுகிறது.ஒரு வேலை லியோ ஆயிரம் கோடி என்ற கனவை தொடவில்லை என்றால் தளபதி 68 அதனை தொட்டுவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Most Popular