Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாஇன்று இரவு வெளியாகும் ரஜினியின் அடுத்த படம் அப்டேட்..! லைகா அறிவிப்பு

இன்று இரவு வெளியாகும் ரஜினியின் அடுத்த படம் அப்டேட்..! லைகா அறிவிப்பு

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெய்லு திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் நிறைவு பெற்ற நிலையில் சிறிது நாள் ஓய்வில் இருந்த ரஜினிகாந்த் தற்போது தனது அடுத்த படத்தில் நடிப்பதற்காக இன்று மும்பை சென்றுள்ளார்.

- Advertisement -

மும்பையில் நாளை முதல் லால் சலாம் படத்திற்கான ஷூட்டிங் தொடங்க உள்ளது. லால் சலாம் படத்தின் சில காட்சிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் ரஜினி பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

இந்த படத்தை ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இதில் ரஜினி இஸ்லாமிய காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் உள்ள அதிகாரியாக ரஜினி நடிக்கிறார். ஏற்கனவே நடிக்க ரஜினிகாந்த் மும்பையில் இஸ்லாமிய வேடத்தில் நடித்த பாட்ஷா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

- Advertisement -

தற்போது மீண்டும் அதே பாணியை கையில் எடுத்திருக்கிறார் நிறுவனம் வெளியிட்டுள்ள போஸ்டரில் எட்டாம் தேதி இரவு 12 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் கேரக்டரும் அந்தப் படத்தில் அவருடைய முகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது .அடுத்தடுத்து ரஜினி படம் தொடர்பான அப்டேட்கள் வந்திருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- Advertisement -

இந்தப் படம் கிரிக்கெட் தொடர்பாக இருக்கும் என முதலில் யோசிக்கப்பட்டது. ஆனால் இது ரஜினி படத்தில் வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது
லால் சலாம் படம் தொடர்பான அப்டேட் போஸ்டர் தற்போது இணையதளத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

Most Popular