Friday, May 17, 2024
- Advertisement -
Homeசினிமாதல 62 படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் கிடைச்சிருந்தது.. ஆனால் அது நடக்குல- சந்தானம் வேதனை

தல 62 படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் கிடைச்சிருந்தது.. ஆனால் அது நடக்குல- சந்தானம் வேதனை

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சியில் தனது கலைப்பயணத்தை தொடங்கி பிறகு நம்பர் ஒன் காமெடியனாக விளங்கிய சந்தானம் பிறகு ஹீரோவாகவும் வளம் வந்தார்.

- Advertisement -

ஒரு காலத்தில் சந்தானம் இல்லாத படத்தையே நாம் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சிம்பு, கார்த்தி என அனைத்து டாப் ஹீரோக்களுடனும் சந்தானம் நடித்திருக்கிறார். இந்த நிலையில்தான் நடிகர் சந்தானம் ஹீரோவாக நடிக்க வேண்டும் என ஆசை பட்டு பல்வேறு படங்களில் நடித்தார்.

இதில் சில படங்கள் ஹிட்டும் அடித்தன.சில படங்கள் தோல்வியிலும் முடிந்தன. ஆனால் மீண்டும் காமெடியனாக நடிக்க மாட்டேன் என சந்தானம் உறுதியாக இருந்த நிலையில் தல 62 படத்தில் சந்தானம் நடிக்க போவதாக செய்திகள் வெளியானது.

- Advertisement -

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த அந்தப் படத்தில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் இணைய இருந்தார். ஆனால் அந்த படம் தற்போது கைவிடப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் அது குறித்து பேசிய நடிகர் சந்தானம் தல 62 படத்தில் தான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணமே அந்த கதாபாத்திரம் தான்
அதில் காமெடியும் இருக்கும் சீரியஸ்னஸும் இருக்கும்.
இதனால் அந்த படம் நான் நடித்திருந்தால் நீங்கள் ஒரு புதிய சந்தானத்தை பார்த்திருப்பீர்கள்.

நான் தற்போது மல்டி ஸ்டாரரில் நடிக்க ஆர்வமாக தான் இருக்கின்றேன். ஏற்கனவே கார்த்தி மீண்டும் இணைந்து நடிக்க என்னிடம் கேட்டிருந்தார். காட்டுப்பூச்சி கேரக்டரை மீண்டும் கொண்டு வர அவர் முடிவு எடுத்திருந்தார்.

என்னிடம் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாவது பாகத்தை நடிக்க ஆர்யா கேட்டிருந்தார். அதற்கு நானும் ஓகே சொல்லி இருந்தேன்
அதற்கான பணிகளை இயக்குனர் ராஜேஷ் மேற்கொண்டு வருகிறார். கதை சரியாக இருக்கும் பட்சத்தில் மீண்டும் நான் அதில் நடிக்க இருக்கின்றேன் என்றும் சந்தானம் கூறியுள்ளார். சந்தானம் நடித்த தில்லுக்குதுட்டு படத்தில் இரண்டாவது பாகம் அடுத்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது.

Most Popular