சினிமா

வாரிசு படத்தால் மீண்டும் உயரும் மார்க்கெட்.. குஷியில் இருக்கும் சாக்லேட் பாய்

பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இது நடிகர் விஜய்க்கு மட்டுமல்லாமல் இந்த படத்தில் நடித்த பல நடிகர்களுக்கும் நன்மையை கொடுத்திருக்கிறது. 12b திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சாம். இதற்குப் பிறகு இவர் லேசா லேசா, இயற்கை அன்பே அன்பே போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். ஆனால் அவை எதுவும் அவருக்கு ஒரு பெரிய அளவில் பெயரையோ புகழையும் தேடித் தரவில்லை. அதனால் தெலுங்கு சினிமாவிற்கு காலடி எடுத்து வைத்தார். நடிகர் ஷாம் 2009 ஆம் ஆண்டு  நடித்த கிக் என்ற திரைப்படம் தெலுங்கு சினிமாவில் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது மேலும் இவர் கிக் சாம் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

Advertisement

அதற்குப் பிறகு அவர் தமிழ் சினிமாவில் அந்த அளவிற்கு ஈடுபடவில்லை. நீண்ட காலம் கழித்து ஆறு என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி திரைப்படத்தில் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவ்வளவுதான் தவிர வேறு எந்த முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிகர் சாம் நடித்த வரவில்லை. ஆனால் தெலுங்கு சினிமாவில் இவருக்கென்று ஒரு தனி இடம் உள்ளது.

ஆனால் அதுவும் இப்பொழுது இல்லை. தெலுங்கு சினிமாவிலும் தமிழ் சினிமாவை போலவே அவருக்கென்று இருந்த மார்க்கெட் குறைய தொடங்கியது. இந்த நிலையில் இவர் தற்பொழுது இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில் கதாநாயகனான தளபதி விஜய்க்கு அண்ணன் கதாபாத்திரத்தில் நடிகர் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாகவும் மிக சிறப்பாகவும் நடித்திருந்தார் நடிகர் ஷாம் என்று ரசிகர்களால் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது.

Advertisement

இதனால் சரிந்திருந்த நடிகர் ஷாமின் மார்கெட் தற்பொழுது உயரத் தொடங்கி இருக்கிறது. வாரிசு திரைப்படத்தை அடுத்து நடிகர் சாமிற்கு பல திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வண்ணம் உள்ளது. இதில் சிலர் நடிகர் ஷாமை கதாநாயகனாகவே வைத்து திரைப்படம் எடுக்க தயாராக இருக்கிறார்கள் என்ற செய்தியும் ரசிகர்களிடையே பரவி வருகிறது.
இந்த வாய்ப்பு பயன்படுத்திக் கொண்டு நடிகர் ஷாம் மீண்டும் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடம் பிடிப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top