சினிமா

கோடிகள் வேண்டாம்..!! ரசிகர்களின் நலன் தான் முக்கியம்.. சிம்புவின் முடிவுக்கு குவியும் பாராட்டு

இளைஞர்களால் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சிம்பு ரசிகர்களுக்காக எடுத்த முடிவு அனைத்து தரப்பிலிருந்து பாராட்டுகளை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில் முன்னிலையானவர் என்ற பெயரை பெற்றவர் நடிகர் சிம்பு.சிறு வயதிலேயே இசை, இயக்கம்,படத்தொகுப்பு, நடனம், திரைக்கதை என பல்வேறு துறைகளில் கை தேர்ந்தவர் ஆக சிம்பு விளங்கினார். ஒரு காலத்தில் சிம்பு நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் சில காரணங்களால் அவர் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

மேலும் அவர் நடித்த படங்களும் தோல்வியை தழுவியது.படப்பிடிப்பிற்கு சரியாக சிம்பு வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. துரும்பு போல் இருந்த சிம்பு எடைகள் கூடி பருமனாகவும் மாறி இருந்தார். இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் கடும் உடற்பயிற்சி மூலம் தனது எடையை 30 கிலோ வரை சிம்பு குறைத்தார். மேலும் மதுப்பழக்கத்தையும் கைவிடுவதாக சிம்பு அறிவித்தார். இதன் பிறகு சிம்பு நடித்து வெளியான மாநாடு திரைப்படம் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூலை பெற்று அவருக்கு நல்ல பெயரை கொடுத்தது.

இதன் பிறகு சிம்பு அடுத்தடுத்து படங்களை நடித்து வருகிறார் .கௌதம் வாசுதேவ் மேனன் உடன் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் சிம்பு நடித்து முடித்து விட்டார். இந்த படம் அடுத்த மாதம் 15 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. தற்போது பத்து தலை என்ற படத்தில் நடிகர் சிம்பு பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியிலும் சிம்பு கமல்ஹாசனுக்கு பதிலாக தொகுப்பாளராக பணியாற்றினார். மேலும் சிம்பு தனது ஓய்வு நேரத்தில் பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட ஒரு வாசனை திரவிய பொருளுக்கு சிம்பு மாடலாக நடித்தார். இந்த நிலையில் தான் நடிகர் சிம்புவுக்கு ஒரு விளம்பர வாய்ப்பு வந்தது.அதில் மது, பிரான்பராக் போன்ற பொருட்களுக்கு விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இதற்க் சிம்புவுக்கு கோடிக்கணக்கு ரூபாய் சம்பளமும் பேசப்பட்டது. ஆனால் இந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் சிம்பு மறுத்திருக்கிறார். காரணம் மது போதையால் அடிமையாகி தனது வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்த சிம்பு அதிலிருந்து வெளிவந்து விட்டார். தற்போது தனது ரசிகர்களையும் தவறான வழியில் செல்ல தாமே காரணமாக இருக்க விரும்பவில்லை என்று கூறி அந்த விளம்பர வாய்ப்பை நிராகரித்து உள்ளார். நடிகர் சிம்புவின் இந்த முடிவு பல்வேறு தரப்பிலிருந்து வரவேற்பை பெற்றுள்ளது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

TOP STORIES

To Top