Sunday, September 7, 2025
- Advertisement -
HomeUncategorizedஉயிரிழந்த ரசிகர்கள்..! பெரிய மனசு காட்டிய சூர்யா.. குடும்பத்தை தத்தெடுத்தார்

உயிரிழந்த ரசிகர்கள்..! பெரிய மனசு காட்டிய சூர்யா.. குடும்பத்தை தத்தெடுத்தார்

நடிகர் சூர்யா எப்போதுமே நல்ல விஷயங்கள் செய்வதில் முதன்மையான நபராக இருக்கின்றார். தனது அகரம் அறக்கட்டளை மூலம் நடிகர் சூர்யா பல்வேறு உதவிகளை மாணவர்களுக்கு செய்து வருகிறார்.

- Advertisement -

இதேபோன்று அவரது தம்பி கார்த்திக் விவசாயிகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.இந்த நல்ல விஷயங்களுக்காகவே இவர்களை படங்களை தாண்டி பலர் ரசிகர்களாக இருக்கின்றன.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது படம் ரிலீஸ் மற்றும் பிறந்தநாள் விழாவில் எந்த கட் அவுட் வைக்க வேண்டாம் என்று பலமுறை கூறியிருக்கிறார். ஆனால் இதை கேட்காத ரசிகர்கள் சிலர் ஆந்திராவில் சூர்யா பிறந்தநாள் முன்னிட்டு பேனர் கட்ட முயன்று இருக்கிறார்கள்.

- Advertisement -

அப்போது அங்கு மேலே இருந்த உயர்மட்ட மின்சார ஒயர் இவர்கள் மீது உரசி இருக்கிறது. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு ரசிகர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நடிகர் சூர்யா வீடியோ கால் மூலம் உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்தை பார்த்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

தன்னுடைய ரசிகர்கள் உயிர் இழந்ததற்கு ஆழ்ந்த இரங்கல் கூறியுள்ள சூர்யா இனி தங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து செலவுகளையும் தாமே ஏற்றுக் கொள்வதாகவும் கூறி இருக்கிறார். உங்களுக்கு தேவையான உதவிகளை சூர்யா உறுதி அளித்துள்ளார்.

தன் பிறந்த நாளன்று இரண்டு ரசிகர்கள் இறந்த நிலையிலும் உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு சூர்யா செய்த உதவி ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சூர்யாவுக்கு ஆந்திராவில் அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அவருடைய படம் அம் மாநிலத்தில் உள்ள பெரிய ஸ்டார்கள் படங்களுக்கு நிகராக ஓடிய காலமும் இருந்தது. ஆனால் சமீப காலமாக சூர்யாவின் படங்கள் ஆந்திராவில் சரியான அளவு வசூலை பெறவில்லை.எனினும் சூர்யா தற்போது அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருப்பதால் ஆந்திரா ரசிகர்கள் தற்போது அவருடைய பிறந்தநாளை கூட மிக விமர்சனம் கொண்டாட தொடங்கி விட்டனர்.

Most Popular