சினிமா

ஆஸ்கார் கமிட்டி சார்பில் உறுப்பினராக சேர்ந்து கொள்ள நடிகர் சூர்யாவுக்கு வந்துள்ள அழைப்பு – தென்னிந்திய அளவில் இதுவே முதல் முறை !!!

அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் நேற்று 397 கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகளை ஆஸ்கார் அமைப்பாளரின் உறுப்பினர் வரிசையில் சேர அழைப்பதாக தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் ஆஸ்கார் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வருங்கால 2022 வகுப்பில் 71 ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களும் 15 வெற்றியாளர்களும் அடங்குவர், இதில் அழைக்கப்பட்டவர்களில் 44% பெண்களும், குழுவில் 37% குறைவான சமூகத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.

இதில் நாம் கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நமது நடிப்பின் நாயகன் சூர்யா அவர்களுக்கும் ஆஸ்கார் கமிட்டி சார்பாக அழைப்பு வந்துள்ளது. தமிழ் திரைப்பட வரலாற்றில் மட்டுமின்றி தென்னிந்திய திரைப்பட வரலாற்றிலும் முதல் முறையாக ஆஸ்கார் கமிட்டியில் உறுப்பினராக சேர்ந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முதல் நடிகர் சூர்யாவுக்கு தான்.

Advertisement

சூரரை போற்று ஜெய் பீம் என இரண்டு தலை சிறந்த உலக தரம் வாய்ந்த படங்களை தயாரித்து அதில் நடித்த சூர்யா அவர்களுக்கு இந்த பெருமை நிச்சயம் தகுதியானது தான். இந்த இரண்டு திரைப்படங்களும் பிறமொழி பிரிவில் ஆஸ்கார் விருது விழாவில் செலக்சன் லெவலில் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு திரைப்படத்திற்கும் சூர்யா அவர்களுக்கு விருது கிடைக்கவில்லை என்றாலும், தற்பொழுது அதே ஆஸ்காரில் ஒரு உறுப்பினராக இணைந்து கொள்ள அவரை அழைக்கப்பட்டுள்ளது உண்மையில் மிகப் பெரிய விஷயம் தான்.

சூர்யா மட்டுமின்றி பாலிவுட் நடிகையான கஜோல் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்கள் என உலகில் உள்ள பல்வேறு திறமைவாய்ந்த தனித் தனி நபர்களுக்கும் இந்த அழைப்பு ஆஸ்கார் கமிட்டி சார்பாக அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top