Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசெய்திகள்அரசியலுக்கு அடித்தளம் போடும் திரைப்படங்கள்.. பிரம்மாண்ட இயக்குனரை வைத்து விஜய் போடும் திட்டம்

அரசியலுக்கு அடித்தளம் போடும் திரைப்படங்கள்.. பிரம்மாண்ட இயக்குனரை வைத்து விஜய் போடும் திட்டம்

தளபதி விஜய் வைத்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க தளபதி விஜய்யின் அடுத்த அடுத்த திரைப்படங்களைப் பற்றி அப்டேட்டுகளும் தற்பொழுது வந்து கொண்டிருக்கிறது. தளபதியின் 69 ஆவது திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற கேள்விக்குறி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

- Advertisement -

அதற்கு பதில் கூறும் வகையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.தளபதியின் 69 வது திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கப் போவதாக கூறப்படுகிறது.கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளிவந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று சொல்லப்படும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்று ஹிட்டானது.

சித்திரை படத்தின் மூலம் கார்த்திக் சுப்புராஜின் மீது ரசிகர்களுக்கு மேலும் ஒரு வித கூடுதலான எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிட்டது. அதை ஈடுகட்டும் வகையில் நிச்சயமாக தளபதியின் 69 ஆவது திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் வெற்றி பெற செய்வார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

- Advertisement -

இந்த இதைத்தொடர்ந்து தளபதி அரசியலில் ஈடுபட போவதாகவும் வளர் மத்தியில் ஒரு கருத்து இருக்கிறது. அதை கூடுதலாக உறுதி செய்யும் வகையில் தளபதியின் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு இயக்கத்தை தொடங்கி அரசியல்வாதிகளை போல் செயல்பட்டு வருகிறார்கள்.

- Advertisement -

இதன் மூலம் மக்கள் மனதில் விஜயின் மீது மக்களுக்கு அரசியல் நம்பிக்கை கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் தன்னுடைய 70 ஆவது படத்தை அரசியல் சம்பந்தப்பட்ட திரைப்படமாக அமைக்க தளபதி முடிவு செய்திருப்பதாகவும் அதற்காக இரண்டு இயக்குனர்களை தேர்ந்தெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரம்மாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் சங்கரும் தெறி , பிகில் போன்ற திரைப்படங்களில் தனக்கு இயக்குனராக இருந்து படங்களை வெற்றி பெற செய்த இயக்குனர் அட்லியும் அந்த லிஸ்டில் இருப்பதாக கூறப்படுகிறது .அதிலும் இயக்குனர் சங்கரை வைத்து அரசியல் திரைப்படத்தை இயக்கி அதில் எந்த மாதிரியான விமர்சனங்களை பெறுகிறார் என்பதை வைத்து தான் அட்லீயை வைத்து அடுத்த திரைப்படம் நடிப்பதாக விஜய் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இப்பொழுது எல்லாம் ரசிகர்கள் விஜயை அடுத்தடுத்த திரைப்படங்கள் எப்பொழுது வரப்போகிறது என்று எதிர்பார்ப்பை தாண்டி விஜய் எப்பொழுது அரசியலுக்கு வர போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் தான் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடுவாரா என்ற கேள்வியும் பலர் மத்தியில் எழுந்திருக்கிறது அதை குறி வைத்துதான் அரசியல் ரீதியான திரைப்படங்களை நடிக்க முடிவெடுக்கிறாரா விஜய் கருத்துக்கள் எழுந்து வருகிறது.

Most Popular