Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாராகுல் காந்தி ஸ்டைலை பாலோ செய்யும் விஜய்? லியோக்கு முன் புது முடிவு

ராகுல் காந்தி ஸ்டைலை பாலோ செய்யும் விஜய்? லியோக்கு முன் புது முடிவு

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக விளங்கும் நடிகர் விஜய்க்கு தற்போது அரசியல் ஆசை வந்துவிட்டது. எம்ஜிஆர் பிறகு யாரெல்லாம் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்களோ அவர்களெல்லாம் அரசியலில் ஏதேனும் சாதித்து விட வேண்டும் என்ற வெறி இருக்கிறது.

- Advertisement -

சிவாஜி ,ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என்ன இந்த வரிசை நீண்டு கொண்டே செல்கிறது. தற்போது இந்த பட்டியலில் வந்து விஜய் சேர்ந்திருக்கிறார். இன்னும் நடிகர் விஜய் அரசியலுக்கு நான் வரப்போகிறேன் என்பதை அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.என்றாலும் அதற்கான சிக்னல்களை கொடுத்து வருகிறார்.

234 தொகுதிகளில் இருந்து மாணவர்களை தேர்வு செய்வது,234 தொகுதிகளில் இருந்து தன்னுடைய மக்கள் இயக்கம் நிர்வாகிகளை சந்திப்பது, தன்னுடைய ரசிகர்களை உள்ளாட்சி தேர்தலில் நிற்க அனுமதிப்பது என்று பல நடவடிக்கைகளை விஜய் எடுத்து வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் லியோ திரைப்படத்திற்கு முன்பு நடிகர் விஜய் ஒரு முக்கிய முடிவை எடுக்க உள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எப்படி நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டாரோ, அதேபோல் நடிகர் விஜயின் தமிழகத்தில் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறாராம்.

- Advertisement -

இதன் மூலம் ஒவ்வொரு ஊரிலும் தன்னுடைய ரசிகர்களை சந்திக்க முடியும் என நினைக்கும் விஜய் தமிழக மக்களின் நிலை எப்படி இருக்கிறது. தமிழக மக்களுக்கு என்ன தேவை அவருடைய மனநிலை என்ன என்பதை அரிய விஜய் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

மேலும் இது லியோ திரைப்படத்திற்கு விளம்பரம் போலும் அமையும் என்றும் அவர் நினைக்கிறார். நடிகர் விஜய் சினிமாவுக்காக இதை செய்கிறாரா இல்லை மக்கள் மீது உண்மையான அன்பில் இது செய்கிறாரா என்ற விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.

எனினும் தமிழக மக்களை சந்திப்பது என்பது ஒரு நல்ல முடிவாக இருப்பினும் அதனை திரைப்படம் ரிலீசுக்கு முன் செய்வது தான் தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.

Most Popular