Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய் படம் குறித்து அட்லீ கொடுத்த மாஸ் அப்டேட்..!  அப்படி நடந்தால் ரூ.1500 கோடி நிச்சயம்

விஜய் படம் குறித்து அட்லீ கொடுத்த மாஸ் அப்டேட்..!  அப்படி நடந்தால் ரூ.1500 கோடி நிச்சயம்

பாலிவுட்டில் அனைத்து நடிகர்களும் தேடப்படும் உச்சபட்ச இயக்குனராக ஒரே நாளில் வளர்ந்து விட்டால் இயக்குனர் அட்லி. ஜவான் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றதை அடுத்து தற்போது அட்லியின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

- Advertisement -

ஜவான் திரைப்படம் தற்போது ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் அட்லி நேர்காணல் ஒன்றில் தமது அடுத்த படம் குறித்து பேசி இருக்கிறார்.

இதில் நடிகர் விஜய்யுடன் இணைந்து ஏதேனும் படம் இயக்க வாய்ப்பு இருக்கிறதா என கேட்டார். அதற்கு பதில் அளித்த அட்லி உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்.அது நிச்சயம் நடக்கும். நான் இதுவரை ஐந்து படங்களை எடுத்து இருக்கிறேன். அதில் மூன்று பாடங்கள் தளபதி விஜய் உடையது.

- Advertisement -

விஜய் எனக்கு வெறும் நடிகர் மட்டுமல்ல. என் கூட பிறந்த சகோதரர் போன்றவர். ஜவான் படத்தை நான் இயக்கிக் கொண்டிருந்தபோதே என் படம் தொடர்பான அப்டேட்ஸ்களையும் என்ன நடக்கிறது என்பதையும் நான் விஜய் அண்ணாவிடம் தெரிவித்துக் கொண்டு இருப்பேன்.

- Advertisement -

படம் வெற்றி அடைந்த பிறகு நடிகர் விஜய் எனக்கு குறுந்தகவல் ஒன்றையும் அனுப்பி இருந்தார். அதில் இயக்குனராக என்னுடைய திறமையை உலகம் இனி பார்க்கப் போகிறது என்று பாராட்டி இருந்தார். நிச்சயமாக நான் விஜய் அண்ணாக்காக ஒரு படம் செய்து கொண்டிருக்கிறேன்.

மேலும் என்னுடைய திரைப்பட வாழ்க்கை இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு நடிகர் விஜய்யும் ஷாருக்கானும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறார்கள். இதனால் அவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் வகையில் நான் ஒரு கதையை தயார் செய்து கொண்டிருக்கிறேன்.

அப்படி அந்த கதை சிக்கிக்கொண்டால் நிச்சயமாக ஷாருக்கானும் விஜயும் அந்த படத்தில் நடிப்பார்கள். இதனால் தான் நான் ஜவான் படத்தில் நடிகர் விஜய் ஒரு காட்சியில் நடிக்க வைக்க கேட்கவில்லை. இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடித்தால் நிச்சயம் 1500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் அடையும் என நிருபர் கூற நிச்சயமாக அதற்கு மேல் கூட செல்லும் என அட்லி பதிலளித்தார் .

Most Popular