Uncategorized

வாரிசு வசூல் சாதனையைத் தொடர்ந்து மீண்டும் வம்சியுடன் இணையவுள்ள விஜய்… !

Vijay and Vamsi Paidhipally

தெலுங்கு இயக்குனர் வம்சி பைதப்பள்ளியுடன் கைகோர்த்து வாரிசு எனும் முழுக்க முழுக்க ஓர் குடும்பத் திரைப்படத்தை பொங்கலுக்கு அளித்தார் நடிகர் விஜய். ஆரம்பம் முதலே படக்குழு இது குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படம் எனக் கூறியே வியாபாரம் செய்தனர், அவர்கள் எதிர்பார்த்தபடியே படத்தை இன்றளவும் குடும்பங்கள் கொண்டாடி வருகின்றன.

இருப்பினும் படத்தில் சில காட்சிகள் கிரிஞ்சாக இருப்பதாக கேலி செய்தனர். அவர்களது வார்த்தைகள் எல்லாம் பெரிதாக எடுபடவில்லை. மக்களுக்கு படம் பிடித்தால் அது வசூல் சாதனை புரிந்து வெற்றித் திரைப்படமாக அமையும். இதுவரை வாரிசு படம் 300 கோடி வசூல் ஈட்டியுள்ளது. விடுமுறை தினங்களில் இன்னும் ஹவுஸ்புல் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர்த்து டிஜிட்டல் மற்றும் ஓடிடி வியாபாரத்தில் மெகா லாபத்தை ஏற்கனவே சம்பாதித்துவிட்டார் தில் ராஜு.

Advertisement

விஜய் விண்டேஜ் வேடம் அணிந்து வாரிசு படத்தைக் கொடுத்ததற்கு முக்கியக் காரணம், அவரது மார்கெட்டை தெலுங்கில் பரப்பவும் குடும்பங்களின் ஆதரவைப் பெறவும் தான். வாரிசு மூலம் அதைச் செய்து முதல் படியைத் தாண்டினார் விஜய். அதோடு அவர் நிறுத்தாமல் மீண்டும் இயக்குனர் வம்சியுடன் தளபதி 69 படத்தில் ஒன்று சேர்ந்து செயல்படும் எண்ணத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து லியோ படத்தை உருவாக்கி வருகிறார். இது பெரிய பட்டாளம் கொண்ட ஓர் கேங்ஸ்டர் படம். அடுத்து சன் பிக்சர்ஸ் – அட்லீயுடன் சேர்ந்து தளபதி 68 செய்யப் போகிறார். இதற்கான அனைத்து முன் வேலைகளும் ஏற்கனவே முடிந்துவிட்டது. அதன் பின்னரே விஜய் மற்றுமொரு முறை வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது இப்போதைக்கு அதிகாரபூர்வமான செய்தி அல்ல. நடக்க வாய்ப்பு உள்ளது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top