தமிழ் சினிமாவின் அதிக பொருட்செலவில் இரண்டு பாகங்கலாக எடுக்கப்பட்ட திரைப்படம் பொன்னியின் செல்வன். வரலாற்று காவியமான இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் , கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் ,திரிஷா, சரத்குமார் ,ஜெயராம் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். மணிரத்தினம் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ. ஆர் .ரகுமான் இசை அமைத்துள்ளார். தெலுங்கில் பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர், கன்னடத்தில் கேஜிஎப் 2 ஆகிய திரைப்படங்கள் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை ஈட்டியது .
தமிழ் திரையுலகில் இதுவரை அப்படிப்பட்ட ஒரு வசூலை எந்த திரைப்படமும் நிகழ்த்தியதில்லை. ஆனால் மணிரத்தினத்தின் பி.எஸ். 1 அத்தகைய சாதனையை படைக்கும் தகுதி உடையது என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். காரணம் பொன்னியின் செல்வன் கதை மேல் உள்ள நம்பிக்கைதான் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எப்படி ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்கள் இருக்கின்றதோ அதேபோல் தமிழ்நாட்டுக்கு பொன்னியின் செல்வன் அனைவராலும் போற்றப்பட்டு வருகிறது. சோழர்கள் கதையை கூறும் இந்த திரைப்படம் தத்ரூபமாக எடுக்கப்பட்டிருந்தால் நிச்சயம் இந்த படம் பாகுபலிக்கு டஃப் கொடுக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை சோழன் வருகின்றான் என்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டு இருந்தது. தற்போது படத்தின் மூத்த கதாநாயகனான நடிகர் விக்ரமின் கதாபாத்திர தோற்றம் தற்போது வெளியாகி உள்ளது. இதில் ஆதித்ய கரிகாலனாக நடிகர் விக்ரம் வாழ்ந்திருக்கிறார் .கம்பீரத் தோற்றத்துடன் பார்த்த உடனே பட்டையை கிளப்பும் வசீகரத்துடன் விக்ரம் இந்த போஸ்டரில் உள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. வரும் செப்டம்பர் 30ஆம் தேதி இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் நாடு முழுவதும் திரைக்கு வருகின்றது .இதனை ஒட்டி படத்திற்கான ப்ரோமோஷன் வேலையை தயாரிப்பு நிறுவனமான லைக்கா இறங்கி உள்ளது. முதலில் ஒவ்வொரு நடிகர்களின் கதாபாத்திரங்களையும் போஸ்டராக வெளியிட்டு, அதன் பின்னர் படத்தின் டீசர், ட்ரெய்லர் மிகப்பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.