Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாலியோ படத்தில் நடிக்க லோகேஸ் அழைத்தார்.. ஆனால் கதை மாறியது- விசால் ஓபன் டாக்

லியோ படத்தில் நடிக்க லோகேஸ் அழைத்தார்.. ஆனால் கதை மாறியது- விசால் ஓபன் டாக்

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படத்தில் வில்லன்களாக ஆக்சன் கிங் அர்ஜுன்,பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் விஷால் அளித்துள்ள பேட்டி தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நான் நடிகர் விஜயின் தீவிர ரசிகன். விஜய் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் நான் வரவேற்பேன்.

மேலும் நடிகர் விஜய் வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. இது எப்போது நடைபெறும் என்று தெரியவில்லை
இதைப்பற்றி நான் பலமுறை நடிகர் விஜய் இடம் கூறி இருக்கிறேன். மேலும் லியோ படத்தில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

நடிகர் விஜய்க்கு தம்பியாக ஹெரால்ட் தாஸ் கதாபாத்திரத்தில் நடிக்க என்னை தான் லோகேஷ் கனகராஜ். முதலில் அழைத்தார் ஆனால் நான் அப்போது மார்க் ஆண்டினி படத்திற்காக வேறு கெட்டப்பில் இருந்தேன்.

- Advertisement -

அந்த கெட்டப்பில் இருந்து என்னால் மாற முடியவில்லை. இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தின் கதையை முற்றிலுமாக மாற்றி விட்டார். தற்போது விஜயின் தம்பி என்பதற்கு பதில் விஜயின் அண்ணனாக தற்போது ஆக்சன் கிங் அர்ஜுன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தற்போது தெரிந்து கொண்டேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் பாபு ஆண்டனி அளித்துள்ள பேட்டி ஒன்றில் லியோ திரைப்படத்தில் பல காட்சிகள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இருக்கும். ரசிகர்களை சீட்டு நுணிக்குள் கொண்டு வந்து அவர்கள் உற்சாகமாக குரல் எழுப்பும் வகையில் பல காட்சிகளை இயக்குனர் லோகேஷ் வடிவமைத்திருக்கிறார்.

நான் படத்தில் பல்வேறு காட்சிகளில் வருவேன்.விஜய், சஞ்சய்தத், அர்ஜுன் ஆகிய மூன்று பேரும் ஒரே சீனில் தோன்றும் போது தியேட்டரில் அதிரும். மேலும் இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Most Popular