Saturday, May 18, 2024
- Advertisement -
HomeUncategorizedநடிகர் விஜயுடன் விசால் திடீர் சந்திப்பு..! மனம் இறங்கி உதவிய விஜய்

நடிகர் விஜயுடன் விசால் திடீர் சந்திப்பு..! மனம் இறங்கி உதவிய விஜய்

தமிழ் சினிமாவில் புரட்சித் தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் விஷால். தயாரிப்பு நிறுவனம், நடிகர் சங்கம், அரசியல் நடிகர் என பன்முகம் கொண்ட நடிகர் விஷால். கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்வியை கொடுத்து வருகிறார்.

- Advertisement -

அவர் நடித்த கடைசியாக 7 படங்களும் மண்ணை கவ்வியது. இதனால் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டத்தில் விஷால் இருக்கிறார். இந்த நிலையில் தற்போது அவர் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இது எஸ் ஜே சூர்யா,செல்வ ராகவன் உள்ளிட்ட பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஷால் தற்போது தளபதி விஜயை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார். மார்க் ஆண்டினி படத்தை தான் விஷால் பெரிதும் நம்பி இருக்கிறார். இதில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த ட்ரெய்லர் பிரபலமாக வேண்டும் என்றால் பெரிய நட்சத்திரங்களை வைத்து டிரைலரை ரிலீஸ் செய்ய வேண்டும். இதனால் நடிகர் விஜய் நேரில் சந்தித்து அவரிடம் இந்த ட்ரெய்லரை காட்டினால் இந்த செய்தி பெருமளவில் விஜய் ரசிகர்களால் பகிரப்படும். இதன் மூலம் மார்க் ஆண்டனி படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைக்கும் என்பதை நடிகர் விஷால் புரிந்து கொண்டார்.

நடிகர் விஷாலுக்கு பிடித்த நடிகர் விஜய் என்பதால் விஷாலுக்கு உதவி செய்யும் வகையில் இந்த சந்திப்புக்கு ஒப்புகொண்ட விஜய், மார்க் ஆண்டனி டீசரை பார்த்து விஜய் வாழ்த்தும் கூறியிருக்கிறார்.

எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இளம் நடிகர்கள் சந்தித்து வாழ்த்து பெறுவார்கள். தற்போது முதல் முறையாக விஜய் சந்தித்து விஷால் வாழ்த்து பெற்று இருக்கிறார். இது காலம் மாறி வருகிறது என்பதை காட்டுவதாக விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Most Popular