Saturday, May 18, 2024
- Advertisement -
Homeசினிமாஎன்னுடைய அனக்கோண்டா பத்தி பேசியது ஏன்? மன நல மருத்துவரிடம் செல்லும் விசால்

என்னுடைய அனக்கோண்டா பத்தி பேசியது ஏன்? மன நல மருத்துவரிடம் செல்லும் விசால்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் புரட்சித்தளபதியாக வலம் வந்த விஷால். அரசியல் நடிகர் சங்கம் தயாரிப்பு சங்கம் சட்டமன்றத் தேர்தல் என அனைத்துமே வலம் வந்தார். பிறகு சினிமாவிலிருந்து சிறிது நேரம் ஒதுங்கி இருந்த விஷால் தொடர்ந்து நடித்த படங்கள் எல்லாம் தோல்வியில் முடிந்தது.

- Advertisement -

இதனை அடுத்து தற்போது மார்க் ஆண்டனி படத்தை தான் விஷால் வெகுவாக நம்பி இருக்கிறார். இந்த நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் விஷால் மார்க் ஆண்டனி படத்தில் நல்லவேளை என் அனகோண்டாவுக்கு ஒன்னும் ஆகல என்ற வசனத்தை பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை ஸ்ரீ ரெட்டி விஷாலின் அண்மையை பேசும் வகையில் அவருடைய மர்ம உறுப்பை அனகோண்டாவுடன் ஒப்பிட்டு பேசினார். இது குறித்து பேசிய விஷால் தாம் இந்த வசனத்தை முதலில் பேச விரும்பவில்லை. மக்களே மறந்து விட்டார்கள் நாம் ஏன் ஞாபகப்படுத்த வேண்டும் என நினைத்தேன்.

- Advertisement -

ஆனால் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் அனகோண்டா குறித்து பேசுங்கள் நீங்களே சொல்லிவிட்டால் அதன் பிறகு மக்களே மறந்து விடுவார்கள் என்று கூறினார். மேலும் நான் ஏன் அப்படி பேசினேன் என்று கிளைமேக்ஸ் காட்சியில் உங்களுக்கு புரிய வரும். மேலும் என்னுடைய தந்தை என்னை பற்றி எந்த செய்தி வந்தாலும் பேப்பரில் கட் செய்து அதனை ஃபெயில் செய்து வைத்துக் கொள்வார்.

- Advertisement -

என்னை பற்றி கிசுகிசு செய்து வந்தால் கூட என் பையன் பெயர் பேப்பரில் வருகிறது என்று இப்படி செய்வார். ஒருமுறை லட்சுமிமேனனை நான் திருமணம் செய்து கொள்வதாக வெளிவந்து செய்தியை கூட கட் செய்து வைத்து விட்டார். அது பொய் என்று அவருக்கு தெரிந்தும் இதை போல் செய்தார்.

ஒவ்வொரு நடிகரும் தங்களுடைய மனநிலையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இதை நான் வெளியே சொல்வதில் எனக்கு எந்த ஒரு வெட்கமும் இல்லை. நான் அவ்வப்போது மனநல மருத்துவர் சந்தித்து ஆலோசனை பெற்று வருகின்றேன். அது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கட்டத்தில் தேவைப்படுகிறது.

மனநல மருத்துவரை சந்தித்த பிறகு வாழ்க்கையில் ஒரு தெளிவு கிடைக்கும். எந்த ஒரு புது முக நடிகர்களும் தேவையில்லாத விஷயத்தை குறித்து கவலைப்பட வேண்டாம். தொடர்ந்து உழையுங்கள் உங்கள் வேலையை கவனியுங்கள் நிச்சயமாக உங்களுக்கு நல்லது நடக்கும் என விஷால் கூறியுள்ளார்.

Most Popular