Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமாதியேட்டரில் அனுமனுக்கு ஒரு சீட் கேட்டது இதற்கு தான்- இயக்குனர் விளக்கம்

தியேட்டரில் அனுமனுக்கு ஒரு சீட் கேட்டது இதற்கு தான்- இயக்குனர் விளக்கம்

இயக்குனர் ஓம்ராவ் இயக்கத்தில் 3டி திரைப்படமாக உருவாகி இருக்கும் ஆதி புருஷ் திரைப்படம் வருகின்ற 16ஆம் தேதி திரையரங்கங்களில் வெளியிடப்பட இருக்கிறது. கடந்த ஆண்டு இந்த திரைப்படத்தினுடைய டீசர் வெளியிடப்பட்ட நிலையில் பார்ப்பதற்கு கேலிச்சித்திரம் போல் இருக்கிறது என்று பல கேள்விகளுக்கு ஆளானது திரைப்படத்தின் உடைய கிராபிக்ஸ் காட்சிகள்.

- Advertisement -

இதனால் விழித்துக் கொண்ட படக்குழுவினர்கள் வெளியிடப்பட இருந்த தேதியை சற்று மாற்றி இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தி திரைப்படத்தின் உடைய கிராபிக்ஸ் காட்சிகளை மெருகேத்தி மீண்டும் ட்ரைலராக வெளியிட்டார்கள்.

திரைப்படத்தின் டிரைலர் ஓரளவு ரசிகர்கள் மத்தியில் ஒரு வரவேற்பை பெற்றது. பர்ஃபெக்ட் சந்திராபதி மிர்ச்சி போன்ற தெலுங்கு திரைப்படங்களில் எல்லாம் நடிகர் பிரபாஸ் நடித்திருக்கிறார் ஆனால் அவரை சினிமா உலகிற்கு பிரபலப்படுத்தியது 2015ஆம் ஆண்டு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படம் ஆகும்.

- Advertisement -

- Advertisement -

இந்தத் திரைப்படத்திற்குப் பிறகு இவருக்கென்று பல ரசிகர்கள் குவிய தொடங்கினார்கள். ஆனால் இதற்குப் பிறகு இவருக்கு வந்த சாகோ ராஜேஷ் ஷாம் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை .

இதற்குப் பிறகு நடிக்கக் கூடிய திரைப்படத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக ஆதிபுரூஸ் என்ற திரைப்படத்தை தேர்வு செய்திருக்கிறார் நடிகர் பிரபாஸ். இது ராமாயணத்தை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.

ஆனால் இந்தத் திரைப்படத்திற்கு பிறகு இருக்கும் பெயரும் இவருக்கு போய்விடும் போல் தெரிகிறது. திரைப்படத்தினுடைய ட்ரெய்லரை பார்த்ததற்கே இத்திரைப்படத்தில் உள்ள நடிகர்கள் சற்று மோசமாக நடித்திருக்கிறார்கள். அதுவும் கதாநாயகன் பிரபாஸ் நடிகர் பள்ளிக்கு சென்று நடிப்பை கற்று வரவேண்டும் என்று கிண்டல் செய்து வருகிறார்கள். ஆரம்பத்திலேயே இந்த திரைப்படம் இப்படி ஒரு பெயரை எடுத்திருக்கிறது.

மேலும் இத்திரைப்படத்தினுடைய இயக்குனர் ஓம்ராவ் திரைப்படம் வெளியிடப்படும் ஒவ்வொரு திரையரங்குகளிலும் அனுமனுக்கு என்று ஒரு இடம் ஒதுக்கிட வேண்டும் என்று கூறியிருக்கிறாராம். இது எல்லாம் தேவையா என்றும் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். அதற்கு விளக்கமாக என்னுடைய தாய் ராமாயணம் நாடகம் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ அங்கே எல்லாம் அதை பார்ப்பதற்கு அனுமான் வருவார் என்று கூறுவார்.

அதே போல் இதுவும் ராமாயணத்தை கதைக்களமாகக் கொண்ட திரைப்படம் என்பதால்தான் அங்கு அனுமான் வருவார் என்று நான் ஒரு இடம் கேட்கிறேன் என்று கூறி இருக்கிறான் எதுவெல்லாம் இந்த திரைப்படத்தை எங்கு கொண்டு நிறுத்தப் போகிறதோ தெரியவில்லை

ஆனால் சில நேரங்களில் எதிர்பார்த்த திரைப்படத்தை விட எதிர்பாராத திரைப்படங்கள் வெற்றியை அடையும் அந்த வரிசையில் இந்த திரைப்படமும் இடம் பிடித்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

Most Popular